வடக்கு கிழக்கிலே நீதிமன்றங்கள் இனவாதப் பொலிஸாரின் கட்டளைகளிற்கு பணிந்து செயல்படுகின்றதா என்றொரு கேள்வி இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தெரிவித்தார்.
நாடாளுமன்ற 14-05-2024 அமர்வில் பங்குகொண்டு கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
எங்கள் தேசத்தின்மீது சிறிலங்கா அரசு இனப்படுகொலையை நிகழ்த்தி 15 ஆண்டுகள் கடந்திருக்கின்றது. இந்த 15 ஆண்டுகள் கடந்தும் படுகொலை செய்யப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவில்லை. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அதாவது படையினரின் கைகளில் உறவுகளை ஒப்படைத்தோர், ஈ.பி.டி.பி, கருணா, பிள்ளையான. போன்றாரோல் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோர் தங்களது உறவுகளைத் தேடி இன்றும் அலைந்துகொண்டு இருக்கின்றார்கள். இந்தவேளையிலே வருடந்தோறும் இங்கு இடம்பெற்ற இனப்படுகொலையை நினைவுகூறும் விதமாக வடக்கு கிழக்கிலே வாழும் தமிழ் மக்கள் இந்த இனப்படுகொலை வாரத்தை அனுஸ்டிப்பதும் அந்த வாரத்தில் இனப்படுகொலை தொடர்பில் காட்சிப்படுத்துவதும் 2009இலே இனப்படுகொலை இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது உணவை ஆயுதமாக பயன்படுத்திய கோட்டாபாய ராஜபக்சா அவரது அண்ணன் மகிந்த ராஜபக்சாவும் பட்டினிச் சாவிற்குள் தமிழரகளைத் தள்ளியபோது அந்த தமிழர்கள் உயிர் பிளைத்துக்கொள்வதற்காக அங்கே நெல்லில் இருந்து வெளியேறிய குறுனலை உமியில் இருந்து பிடைத்தெடுத்து தண்ணீர் போட்டு அவித்து பச்சைக் குழந்தைகளிற்குகூட உணவாக ஊட்டு உயிர் பிழைத்த வரலாறு நடைபெற்றிருக்கின்றது.
இதனை நினைவுகூறும் விதமாக அதனை இந்த வாரத்திலே நாங்கள் செய்வது வழமை. திருகோணமலை மாவட்டம் கட்டைபறிச்சான் பகுதியிலே புவனகணபதி ஆலயத்தில் கஞ்சி கொடுக்கும் நிகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது அந்த நிகழ்வில் ஈடுபட்டமைக்காக எங்களுடைய கட்சியின் திருகோணமலை உதவிச் செயலாளர் நவரத்தினராசா கரிகரகுமார் வயது 43 மற்றும் பொது மக்கள் மூன்று பெண்கள் கமலேஸ்வரன் விஜிதா வயது 40, கமலேஸ்வரன் தேன்நிலா வயது 21, சுஜானி 32 வயது ஆகியோரே கைது செய்யப்பட்டு மூதூர் நீதிமன்றில் முறபடுத்தப்பட்டு 14 நாள்கள் தடுப்புக் காவல் வழங்கப்பட்டுள்ளது. இதுதான் இந்த நாட்டினுடைய நல்லிணக்கம் மற்ற மதங்களை மதிக்கின்ற சித்துவமாக இருக்கின்றது.
ஓர் ஆலயத்திலே கஞ்சி காச்சியமைக்காக இந்த தண்டணை வழங்கப்பட்டிருப்பது மிகவும் வேதனைக்குரிய விடயம். இந்த விடயத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். அவர்கள் 4 பேரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். வடக்கு கிழக்கிலே நீதிமன்றங்கள் இனவாதப் பொலிஸாரின் கட்டளைகளிற்கு பணிந்து செயல்படுகின்றதா என்றொரு கேள்வி இருக்கின்றது. பொலிஸார் எதனைச் சொன்னாலும் அதனை அப்படியே ஏற்றுக்கொண்டு நீதிமன்றங்கள் செயல்படவேண்டிய அளவிற்கு நீதிதன்றங்களின் சுயாதீனத் தன்மை பறிக்கப்பட்டுள்ளதா என்றொரு கேள்வி இருக்கின்றது. நேற்றைய தினம் நீதிமன்றம் ஒரு உத்தரவு வழங்கியிருக்கின்றது பொது மக்களை ஒன்று கூட்டுவதும் அவர்களிற்கு கஞ்சிகளை பரிமாறுவதும் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் என பொலிசார் கேட்டுக்கொண்ட தடை உத்தரவை அப்படியே வழங்கியுள்ளார்கள் மறு கேள்வி இல்லாமல். அப்படி என்றால் நான் கேட்கின்றேன் இந்த மாதம் உங்களுடைய வெசாக் மாதம். இந்த மாதத்திலே தனசல உணவு வழங்களை தடை செய்யுமாறு பொலிஸார் கோருவார்களா, அதற்கு நீதமன்றங்கள் தடை உத்தரவு வழங்குமா. இது தமிழர்களிற்கு ஒரு நீதி, சிங்களவர்களிற்கு ஒரு நீதி. பௌத்த நிகழ்வை முன்னட்டு தெருவிற்கு தெரு அந்த நிகழ்வை நீங்கள் செய்கின்றீர்கள் அந்த நிகழ்வை தடுத்து நிறுத்த தயாராக இருக்கின்றீர்களா.
இந்த இனவாதச் செயல்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்வதோடு பொலிஸாரின் அத்து மீறல்கள் எல்லைதாண்டிச் சென்றுகொண்டு இருக்கின்றன. கடந்த 10 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலே இரு பொலிஸார் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரை துரத்திச் சென்று உதைந்து வீழ்த்தியதனால் அவர் மதிலோடு மோதி வீழ்ந்தமையினால் உயிரிழந்திருக்கின்றார். இந்த இரு பொலிஸாரும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும், பொலிஸாரின் அராஜகங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் இதேபோன்று வவுனியா வடக்கில் புளியங்குளம் பொலிஸ் பிரிவில் ஒருவரது வீட்டிற்குள் இன்னொருவர் கடந்த ஏப்பிரல் 12 ஆம் திகதி புகுந்து தாக்குகின்றனர் வெளிநாட்டவரின் பணத்திற்காகவே பொலிஸார் இவ்வாறான அராஜகங்களில் ஈடுபடுகின்றனர் என்றார்.