இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில் தொண்டைமனாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் முள்ளிவாய்க்காலில் உயிர் இழந்த உறுவுகளின் ஆத்மா சாந்திக்கான விசேட பூஜை வழிபாடுகள் இன்றைய தினம் இடம்பெற்றது
இந்த விசேட பூஜை வழிபாடுகளில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் S.சுகிர்தன் அவர்களும் உடுப்பிட்டித் தொகுதி இளைஞர் அணி செயலாளர் தயாபரன் அவர்களும் கோப்பாய் தொகுதி இளைஞர் அணி தலைவர் றேகன் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்
விசேட பூஜை வழிபாடுகளைத்தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சுகிர்தன் அவர்களின் தலமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் தொண்டைமனாறு இலங்கை தமிழ் அரசுக்கட்சியில் வட்டாரக்கிளை உறுப்பினர்கள் , பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்