முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு இன்றைய தினம்17.05.2024 கிளிநொச்சி மாவட்டத்தில் சுண்டிகுளம் இளைஞர்கள், ஆட்டோ சங்கத்தினர் மற்றும் வர்த்தக சங்கத்தினர் இணைந்து மே 18 முள்ளிவாய்க்கால் அவலத்தினை நினைவு கூறும்வகையில் உப்புக்கஞ்சி வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு இறந்த உறவுகளுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டு உப்பு கஞ்சி பகிர்ந்து அளிக்கப்பட்டது.