பு.கஜிந்தன்
மன விரக்தியில் இருந்த முதியவர் ஒருவர் 17-05-2024 அன்றையதினம் தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். இதன்போது ஏழுகோவில் ஏழாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த ஐயாத்துரை தியாகராஜா (வயது 76) என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த முதியவரின் மனைவி உயிரிழந்துள்ளார். அவரது பிள்ளைகள் அனைவரும் வெளிநாட்டில் வசித்து வருகின்ற நிலையில் குறித்த முதியவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் மன விரக்தியடைந்த அவர் இன்றையதினம் அவரது வீட்டில் உள்ள கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துள்ளார். இந்த காட்சி அங்கிருந்த சி.சி.டி கேமராவில் பதிவாகியுள்ளது.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.