பிரபல இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் தனது 62 – வது படமான ‘வீர தீர சூரன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சாரமூடு, துஷரா விஜயன், சித்திக் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தை எச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு ‘வீர தீர சூரன்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக விக்ரமின் பிறந்த நாள் அன்று படக்குழு முன்னோட்டம் வெளியிட்டு அறிவித்தது. இப்படம் இரண்டு பாகங்களாக உருவாக இருக்கிறது. முதலில் இதன் இரண்டாம் பாகம் படமாக்கப்படுகிறது. முன்னதாக இதன் படப்பிடிப்பு மதுரையில் தொடங்கியது. இந்நிலையில், முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக நடிகர் விக்ரம் காணொளி வெளியிட்டு தெரிவித்துள்ளார். அதில், உங்கள் அன்பிற்கு என்றும் நான் அடிமை. முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவுபெற்றது, இவ்வாறு தெரிவித்தார்.
![வீர தீர சூரன்: முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு - விக்ரம்](https://uthayannews.ca/wp-content/uploads/2024/05/Veera-dheera-sooran-Vikram.jpg)