எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 26ம் திகதி கனடாவின் ஸ்காபுறோ நகரில் நடைபெறவுள்ள ‘உதயன் சர்வதேச விருது விழா-2024’ இல் மூன்று வெளிநாட்டு வாழ் தமிழ் சாதனையாளர்கள் விருது வழங்கிக் கௌரவிக்கப்படவுள்ளனர்.
மேற்படி விருது விழாவில் ஐரோப்பியா வாழ் தமிழர்களிலிருந்து ‘உதயன்’ சிறப்பு விருதினைப் பெறுவதற்காக தெரிவு செய்யப்பெற்றுள்ள பிரான்ஸ் வாழ் அருள்மொழித்தேவன் அவர்கள் கடந்த புதன்கிழமை 22ம் திகதி ரொறன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் வந்திறங்கினார்.
அப்போது.அங்கு அவரை வரவேற்கச் சென்றிருந்த அவரது நண்பர்கள் உறவினர்கள் மற்றும் உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர். யுகம் வானொலியின் அதிபர் கணபதி ரவீந்திரன் ஆகியோர் அருள்மொழித் தேவன் அவர்களோடு சேர்ந்து எடுத்துக்கொண்ட படங்கள் இங்கு காணப்படுகின்றன.
விருது பெறவுள்ள அருள் மொழித்தேவன் அவர்கள் பிரான்ஸ் தேசத்தில் நடைபெறும் தமிழர் விழாக்கள் தமிழிசை விழாக்கள் மற்றும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நிதி சேகரிப்பு நிகழ்ச்சிகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்வதிலும் ஒலிபரப்புச் செய்வதிலும் நன்கு அறியப்பெற்றவராக விளங்கி வருபவர்.
அத்துடன் அண்மையில் பிரான்ஸ் வாழ் தமிழ்த் தேசிய உணர்வாளர்களால் நடத்தப்பெற்ற கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் 75வது அகவைத் திருநாள் விழாவை நடத்திய விழாக் குழுவில் முக்கிய பங்குவகித்தவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.