நடிகர் கார்த்தியின் 27-வது படத்தை விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான ’96’ படத்தை இயக்கி பிரபலமான இயக்குனர் பிரேம் குமார் இயக்குகிறார். தற்காலிகமாக ‘கார்த்தி 27’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை சூர்யா – ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் பதிவேற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் பதிவேற்றம் மாலை வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. கார்த்தி 27 படத்தின் பூஜை காணொளியை கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம் படப்பிடிப்பு நிறைவு பெற்றிருப்பதாக அறிவித்தது.
!['கார்த்தி 27' படத்தின் முக்கிய பதிவேற்றம்](https://uthayannews.ca/wp-content/uploads/2021/11/karthi-request-to-his-fans.jpg)