பு.கஜிந்தன்
முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாள்மற்றும் கணக்காளாரின் திருகுதாளம் – உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
முல்லைத்தீவு கல்வி வலயத்திற்கு உற்பட்ட சம்பத்நுகர பாடசாலை அபிவிருத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வழங்காமல் கால இழுத்தடிப்பு சொய்யப்பட்டமை வெளிவந்துள்ளது.
குறித்த பாடசாலையின் அபிவிருத்திக்காக சுமார் 485 740.57 பெறுமதியான நிதியினை விடுவிக்குமாறு மாகாண கல்வி பணிப்பாளரினால் கடந்த வருடம் ஐப்பசி மாதம் கடிதம் அனுப்பப்பட்டது.
எனினும் முல்லைத்தீவு வலயக் கல்வி பணிப்பாளரான தமிழ்மாறன் மற்றும் கணக்காளரான திவ்ய ரூபன் ஆகியோர் குறித்த பாடசாலைக்கான நிதியை வழங்காது காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் மாகாண கல்வி பணிப்பாளர் ஜோன் குயின்டர்ஸ் உள்ளதீவு வலயக் கல்வி பணிப்பாளரிடம் குறித்த நிதி வழங்கமை தொடர்பில் விளக்கம் கேட்டு எழுதும் மூலம் கடிதம் அனுப்பி உள்ளார்.
முல்லைத்தீவு வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் கணக்காளர் தொடர்பில் ஏற்கனவே பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.