பு.கஜிந்தன்
தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுவரும் யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பிரதான நுளைவாயிலில் இக்கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையுடன் இணைந்த புதிய கட்டடத் தொகுதியினை இன்று 24.05.2024 வியாழக்கிழமை கௌரவ ஜனாதிபதி, கல்வியமைச்சர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு திறந்து வைத்தனர்.
தங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறாமல் இக் கட்டடத்தொகுதி ஜனாதிபதியினால் திறந்துவைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இப்போராட்டம் இடம்பெற்றது. இதனை யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கம் கண்டிப்பதோடு இச் செயற்பாட்டினை எதிர்த்து யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான வளாகம் மற்றும் மருத்துவபீடம் என்பவற்றின் வாயிலில் கறுப்புக் கொடிகள் பறக்கவிட்டிருந்தன.