மைனா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகினார் விதார்த். பிரபு சாலமன் இயக்கத்தில் வந்த மைனா திரைப்படம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து முதல் இடம், கொலைகாரன், வீரம், குற்றமே தண்டனை, குரங்கு பொம்மை ஒரு கிடாயின் கருணை மனு, காற்றின் மொழி போன்ற பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். சில மாதங்களுக்கும் முன் வெளியான இறுகப்பற்று திரைப்படத்தின் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். நடிகர் விதார்த் தற்போது ‘லாந்தர்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை முண்டாசுப்பட்டி, ராட்சசன், கட்டா குஸ்தி படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய சாஜி சலீம் இயக்குகிறார். சாஜி சலீமுடன் இரண்டாம் முறை இணைந்து பணியாற்றுகிறார். இதற்கு முன் இவர் இயக்கத்தில் விடியும் வரை காத்திரு திரைப்படத்தில் நடித்து இருந்தார். இதில் சுவேதா டோரத்தி, விபின், சஹானா கவுடா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை தொழிலதிபர் பத்ரி, எம் சினிமா சார்பில் தயாரிக்கிறார். படத்தின் முதல் பாடலான அயல் பிறை பாடல் தற்பொழுது வெளியாகியுள்ளது. இப்பாடலை பிரபல பின்னணி பாடகரான சக்தி ஸ்ரீ கோபாலன் பாடியுள்ளார். உமா தேவி மற்றும் தேவா பாடலின் வரிகளை எழுதியுள்ளனர்.
![லாந்தர் படத்தின் 'அயல்பிறை' பாடல் வெளியானது](https://uthayannews.ca/wp-content/uploads/2024/05/Lantern-pada-padal-ayalpirai.jpg)