மேற்படி விழாவில் வெளிநாடுகளிலிருந்து விருது பெறுவதற்காக கனடாவிற்கு அழைக்கப்பெற்ற மூவர் மற்றும் கனடா வாழ் வெற்றியாளர்கள் நால்வர் என எழுவர் மேடையில் தனித்தனியாகக் கௌரவிக்கப்பட்ட பின்னர் ஒன்றாக மேடையில் நிற்பதையும் அவர்களை வாழ்த்தும் வகையில் கனடா ஒன்றாரியோ மாகாணத்தின் அமைச்சுக்களின் பாராளுமன்றச் செயலாளரும் மாகாண உறுப்பினருமான லோகன் கணபதி மற்றும் மார்க்கம் நகர சபையின் 7ம் வட்டார உறுப்பினர் யுனைற்றா நாதன் ஆகியோரும் விருதாளர்களோடு இணைந்து நிற்பதையும் படத்தில் காணலாம்.
உதயன் ‘தலைமைத்துவ விருது’ வழங்கப்பெற்ற சிவஶ்ரீ நா. சோமஸ்கந்தக் குருக்கள் அவர்கள். உதயன் ‘வர்த்தக மேம்பாட்டு விருது’ வழங்கப்பெற்ற வீடு விற்பனை முகவர் ராஜ் நடராஜா அவர்கள். உதயன் ‘கலை இலக்கிய மேன்மை விருது’ வழங்கப்பெற்ற தங்கராசா சிவபாலு அவர்கள். உதயன் ‘இளையோருக்கான அடையாள விருது’ வழங்கப்பெற்ற செல்வி ஸ்ருதி பாலமுரளி அவர்கள். “உதயன் வாழ்நாள் சாதனையாளர் – தமிழ்நாடு விருது’ வழங்கப்பெற்ற ‘தமிப்பணி’ ஆசிரியர் வா. மு. சே. திருவள்ளுவர் அவர்கள். உதயன் ‘ சிறப்பு விருது- ஐரோப்பா’ என்னும் கௌரவ விருது வழங்கப்பெற்ற பிரான்ஸ் வாழ் ஆர்கேஎஸ். அருள்மொழித்தேவன் அவர்கள் ஆகியோர் மேடையில் மகிழ்ச்சியுடன் நிற்பதைக் காணலாம்..