விஜய் சேதுபதியின் 50 -வது படமாக ‘மகாராஜா’ படம் உருவாகி வருகிறது. குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இப்படத்தை இயக்குகிறார். சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார். இந்த படத்தின் ‘முதல்காட்சி பதாகை சில மாதங்களுக்கு முன் வெளியானது. அதில் இதுவரை கண்டிராத அவதாரத்தில் விஜய் சேதுபதியின் தோற்றம் அமைந்திருந்தது. ஒரு சலூனுக்குள் ஆழ்ந்த சிந்தனையில் காயங்களுடன் விஜய் சேதுபதி அமர்ந்துள்ள அந்த பதாகை ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. இந்த படத்தில் அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகள் குறித்து காட்சிப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் இன்று(மே 30) ‘மகாராஜா’ பராக்.. முன்னோட்ட பதிவேற்றம் கொடுத்த விஜய் சேதுபதி மகாராஜா படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட உள்ளதாக விஜய் சேதுபதி தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
!['மகாராஜா' பராக்.. முன்னோட்ட பதிவேற்றம் கொடுத்த விஜய் சேதுபதி](https://uthayannews.ca/wp-content/uploads/2024/05/Maharaja-barak-Vijay-sethupathi.jpg)