நடராசா லோகதயாளன்
யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் அனைவரும் ஒன்றினைந்து புறக்கணித்தனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை வடக்கு மாகாண ஆளுநர் பி.எம்.எஸ்.சாள்ஸ் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்று இடம்பெற்றது.
இந்த மாவட்டத்திலும் மாகாண சபையின் அலகிலும் பணியாற்றும் சுமார் 25 நிர்வாக சேவை அதிகாரிகள் உள்ளனர். எனினும் அவர்கள் இந்த கூட்டத்தை புறக்கணித்தனர்.
நிர்வாக சேவை அதிகாரிகளின் பணிப் புறக்கணிப்பு காரணமாக இந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மாவட்ட கடமை நிறைவேற்று அரச அதிபர் ம.பிரதீபன் மற்றும் மாகாண சபையை சேர்ந்த பொ.வாகீசன் ஆகிய இரு அதகாரிகள் மட்டுமே கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
ஊதிய உயர்வு உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் இந்த நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மருத்துவ கழிவுகள் பிரச்சனை
அரியாலையில் பொதுமக்கள் குடியிருப்புகள் மத்தியில் உள்ளகாணியில் சுகாதாரத்திற்கும் தீங்கு விளைவுக்கும் வகையில் மருத்துவ கழிவுகள் எரியூட்டப்பட்டமை எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகள் வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளபடவேண்டும் என்றும் இதனை கண்காணிக்க உரிய பொறிமுறை அவசியம் என பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் இன்றையதினம் மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தில் முன்மொழிந்து கோரிக்கை வைத்தார்.
இதன்போது அமைச்சர் வைத்தியசாலை பணிப்பாளரிடமும் இது தொடர்பில் கேள்வி எழுப்பினார் இதற்கு பணிப்பாளர் சம்பவத்திற்கு அடுத்தநாளே கழிவுகள் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்ப்பட்டு தற்காலிகமாக அந்த கழிவுகளை பாதுகாப்பாக சேமித்து வைத்துள்ளோம் மற்றும் புதிய எரியூட்டி தெல்லிப்பழையில் உள்ள எரியூட்டிகளில் எரிக்கப்பட்டுவருகின்றன இந்த காணி வைத்தியசாலைகாணி என்பதாலே அங்கு சேமிக கப்பட்டு வந்த்து மக்களின் போராட்டத்தை அடுத்து அடுத்தநாளே அகற்றப்பட்டுவிட்டது என்று தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் இந்த விடயத்தை நியாயப்படுத்தாமல் கவனமாக பார்க்கவேண்டும் அவதானமாக செயற்பட்டிருக்கலாம் உங்களது காணியாக இருந்தாலும் இவ்வாறு இனிஇடம்பெறாமல் பாருங்கள் என்று தெரிவித்தார்.