பு.கஜிந்தன்
சர்வதேச ரீதியில் இன்றையதினம் புகைத்தல் ஒழிப்பு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. அந்தவகையில் புகைத்தல் மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிரான போராட்டம் இன்றையதினம் சங்கானை பேருந்து நிலையத்திற்கு முன்னால் நடைபெற்றது.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் “அழகான இளைஞர்களின் உடல் அழகையும் முகத்தின் வசீகரத்தையும் சிதைக்கும் போதைப்பொருள் பாவனைக்கு ஏமாறமாட்டோம், எமது பிள்ளைகளை புகையிலைக் கம்பனிகளிடமிருந்து பாதுகாக்க அனைவரும் அணிதிரள்வோம், புகைப்பதால் உன் அழகு புன்னகை இழக்கும், உடலை உருக்கும் சிகரெட் பாவனை எதற்கு?, சினிமாவில் புகைப்பதை பார்த்து உன் கல்வியை அழிக்காதே” என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தின் நிர்வாகத்தினர் – அங்கத்தவர்கள், சங்கானை பிரதேச செயலக பிரதேச செயலர் திருமதி கவிதா உதயகுமார், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், இளைஞர்கள், யுவதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.