கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிக்கும் ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படத்தின் க்ளிம்ப்ஸ் காணொளி வெளியானது.
‘வணக்கம் சென்னை’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி கவனம் பெற்றவர் கிருத்திகா உதயநிதி. இவரது இயக்கத்தில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் ‘காதலிக்க நேரமில்லை’. இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவி நாயகனாக நடிக்கிறார். நித்யா மேனன், யோகி பாபு, லால், வினய், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, டிஜெ பானு, ஜான் கோகேன், வினோதினி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது. விரைவில் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது படத்தின் கிளிம்ப்ஸ் காணொளி வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் குரலில் பாடல் ஒலிக்க, ஜெயம் ரவி, நித்யா மேனன் இருவரும் இருக்கும் காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன. தற்போது இந்த க்ளிம்ப்ஸ் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.