கிருஷ்ணா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2006ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘சில்லுனு ஒரு காதல்’. இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இதில் ஜோதிகா, பூமிகா, வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள், நகைச்சுவை காட்சிகள் என அனைத்தும் ரசிகர்களால் இன்று வரை கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனையடுத்து, தற்போது ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தின் இரண்டாம் பாகத்தை அவர் இயக்கவுள்ளார். இந்த நிலையில், இப்படத்தில் நடிகர் கவின் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
![‘சில்லுனு ஒரு காதல்’ இரண்டாம் பாகத்தில் கவின் - புதிய தகவல்](https://uthayannews.ca/wp-content/uploads/2024/06/Silienu-oru-kadhal-Kavin.jpg)