நடராசா லோகதயாளன்.
வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராக வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸினால் ஜே.எஸ்.அருள்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
வடக்கு மாகாண நிர்வாகத்தில் நிர்வாக சேவை விசேட தரத்தைச் சேர்ந்த அதிகாரிகள் பற்றாக்குறையினால் சுகாதார அமைச்சிற்கு நிரந்தர செயலாளர் இன்றி பதில்ச் செயலாளரினால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் வடக்கு மாகாண சபைக்கு நிர்வாக சேவை விசேட தரத்தைச் சேர்ந்த மூவர் அண்மையில் புதிதாக வருகை தந்தனர்.
இவ்வாறு வருகை தந்தவர்களில் ஒருவரான ஜே.எஸ்.அருளராஜ் நேற்றைய தினம் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராக வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸினால் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.