(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்)
(06-06-2024)
தற்போது வெளியாகிய 2023 ஆண்டு க. பொ . த. உயர்தர பரீட்சையில் பல சவால்களை வென்று திறமையான சித்திகளைப் பெற்று மன்-நானாட்டான் டிலாசால் கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் செல்வி. வின்சன் ஜோரச் ஆன் யுஷானிக்கா 3A சித்தியினைப் பெற்று மாவட்ட நிலையில் 06 இடத்தை பெற்றுள்ளார்.
செல்வன். ஞானக்கோன் தனுஷன் வர்த்தக பிரிவில் 3A சித்தியினைப் பெற்று மாவட்ட நிலை 02 பெற்றுள்ளார்.
விநாயகமூர்த்தி அபிராமி 2A,B சித்தியை பெற்று மாவட்டத்தில் 07ம் நிலையையும் ,ஜெகநாதன் அரிய ஜோய்னஸ் 2A,C தர சித்தியினை பெற்று மாவட்ட நிலை 10 வர்த்தக பிரிவில் பெற்றுள்ளனர்
மேலும் கலை பிரிவில் ஜேசுதாசன் ஆன் டிலானி குலாஸ் 3A சித்திகளை பெற்று மாவட்டத்தில் 4ம் நிலையும்,கோபாலகிருஷ்ணன் அபிஷா 3A சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் 08ம் நிலையையும் ,செல்வி.ஜோன் றோயல் ஜெறோசா லெம்பேட் 3A மாவட்டத்தில் 15 நிலையையும் பெற்றுள்ளதோடு பல மாணவ மாணவியர் திறமையான உயர் பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக்கழகம் செல்ல தகுதி பெற்றுள்ளார்கள்.