நடராசா லோகதயாளன்.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் முதல் அரையாண்டில் 4 ஆயரத்து 729 டெங்கு நோயாளர் இனம் காணப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
குடாநாட்டின் டெங்கு கட்டுப்பாடு தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் 05-06-2024 இடம்பெற்ற விசேட கூட்டத்தின் நிறைவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி மேலும் விபரம் தெரிவிக்கையில்:
எமது பிரதேசத்தில் பருவ மழை காலத்தில் டெங்கு நோய்த் தாக்கம் காணப்பட்டாலும் அது ஜனவரி மாதத்தின் பின்னர் குறைவடைவது வழமையாகும். இருப்பினும் இந்த ஆண்டு அது வழமைக்கு மாறாக ஆண்டின் முதல் அரையாண்டின் இதுவரை 4 ஆயரத்து 729 டெங்கு நோயாளர் இனம் காணப்பட்டுள்ளனர். அதே நேரம் ஒரு மரணமும் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக நாம் தீவிர கண்காணிப்பில் ஈடுபடவுள்ளோம். இவ்வாறு அதிகரித்த எண்ணிக்கை மாவட்டம் முழுவதுமாக காணப்பட்டாலும் மாநகர சபை, சாவகச்சேரி, கோப்பாய், பருத்தித்துறை, நல்லூர் போன்ற பகுதிகளில் டெங்குத் தாக்கம் அதகமாக காணப்படுகின்றன என்றார்.