நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படத்தின் முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ‘கல்கி 2898 ஏடி’. இத்திரைப்படத்தில் நடிகர்கள் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென், ராணா டகுபதி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்த திரைப்படம் ரூ.600 கோடி பட்ஜெட்டில் உருவாகிறது. வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் திரைப்படம், பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வருவதாக படக்குழு அறிவித்துள்ளது. அறிவியல் புனைவு திரைப்படமான இதில் பிரபாஸின் அறிமுக வீடியோ சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி வரவேற்பை பெற்றது. அதைபோலவே, அமிதாப் பச்சனின் தோற்றமும் அண்மையில் வெளியானது. ‘கல்கி 2898 ஏடி திரைப்படத்தின் முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. இறுதியில் வரும் கமல்ஹாசனின் தோற்றம் அனைத்து இந்த திரைப்படத்தின் மீது உள்ள ஆர்வத்தை அதிகரித்துள்ளது. இந்த திரைப்படம் ஜூன் 27-ம் தேதி வெளியீடு ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
![“கல்கி 2898 ஏடி” திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு!](https://uthayannews.ca/wp-content/uploads/2024/06/Kalki2898-AD-padam.jpg)