பு.கஜிந்தன்
யாழ்ப்பாண மாநகர கன்னாதிட்டி காளிகோயில் கோபுர கும்பாபிஷேக நிகழ்விற்கு வந்த அடியவர்களின் தாலிக்கொடி மற்றும் சங்கிலி என்பவற்றறை திருடியவர் 1 மணித்தியாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
10-06-2024 அன்று, கன்னாதிட்டி காளிகோயில் கும்பாபிஷேக நிகழ்வில் அடியவர்கள் பல கலந்து கொண்டவேளை திருடர்களின் கைவரிசையில் இருவரது தங்க ஆபரணங்கள் திருடப்பட்டன.
இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் விஷாந்த தலமையிலான யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், கன்னாதிட்டி காளிகோயில் இந்து இளைஞர்களின் ஒத்துழைப்புடன் 27 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணை பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரித்தபொழுது பெண்ணின் உள் உடுப்பில் இருந்து தாலிக்கொடி, சங்கிலி, பென்ரன் என்பன மீட்கப்பட்டன.
கைது செய்யப்பட்ட பெண் கொழும்பு வெல்லம்பிட்டியவை சேரந்தவர் எனவும் வவுனியா பூந்தோட்டத்தில் தற்பொழுது வசிப்பவர் என பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளின் சந்தேகநபரை யாழ்ப்பாணம் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.