இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் லக்கி பாஸ்கர் என்ற திரைப்படத்தில் துல்கர் சல்மான் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். சித்தாரா எண்டர்டெயின்மென்ட் மற்றும் ஃபார்ச்சூன் 24 ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்க, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். பிப்ரவரி 3ம் தேதி வெளியான இப்படத்தின் முதல்பதாகை ரசிகர்களை கவர்ந்தது. அந்த பதாகையில், நடிகர் துல்கர் சல்மான் ஒரு வங்கியின் நுழைவாயிலை நோக்கி நடந்து செல்வது போன்ற புகைப்படம் இடம்பெற்றுள்ளது. தொடர்ந்து, இப்படத்தின் முன்னோட்டம் வெளியானது. லக்கி பாஸ்கர் வரும் செப்டம்பர் 27ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், லக்கி பாஸ்கர் படத்தின் முதல் பாடலான “கொல்லாமல் கொல்லாதே..” என்கிற பாடலின் வரி காணொளி வெளியாகியுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையில் விக்னேஷ் ராமகிருஷ்ணா வரிகளில் ஆனந்த் அரவிந்தக்ஷன், ஸ்வேதே மோகன் இப்பாடலை பாடியுள்ளனர்
![துல்கர் சல்மான் நடிக்கும் லக்கி பாஸ்கர் படத்தின் முதல் பாடல் வெளியீடு](https://uthayannews.ca/wp-content/uploads/2024/06/Lucky-bhaskar-pada-padal.jpg)