இயக்குனர் ஆர்.விஜயகுமார் இயக்கத்தில் உருவாகிய படம் “அழகிய கண்ணே”. இப்படத்தில் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடித்தார். இப்படத்தில், விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் பிரபுசாலமன் ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர். மேலும் சிங்கம்புலி, ராஜ்கபூர், காதல் சுகுமார், ஆன்டிருவ்ஸ், அமுதவானன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு என்.ஆர். ரகுநந்தன் இசையமைத்தார். இத்திரைப்படம் கடந்த ஆண்டு ஜூன் 23-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகி, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் பிரைம் காணொளி ஓடிடி தளத்தில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து படக்குழுவினர் அதிகாரபூர்வ தகவலை வெளியிட்டுள்ளனர்.
![](https://uthayannews.ca/wp-content/uploads/2024/06/Azhagiya-kanne-ott-release.jpg)