2010 ஆம் ஆண்டு ரேடியோ ஜாக்கியாக பணிப்புரிந்தவர். இவர் தொகுத்து வழங்கிய டேக் இட் ஈசி, க்ராஸ் டாக் போன்ற நிகழ்ச்சிகள் மிகப் பெரிய ஹிட்டானது. அதன் பிறகு ஆர்.ஜே பாலாஜி 2013 ஆம் ஆண்டில் இருந்தே தமிழ் படங்களில் சிறுசிறு கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். 2015 ஆம் ஆண்டு நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த ‘நானும் ரவுடிதான்’ திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் நண்பனாக நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை கவர்ந்தார். புகழ், ஜில் ஜங் ஜக், தேவி போன்ற திரைப்படங்களில் நடித்தார். 2019 ஆம் ஆண்டு வெளியான எல்கேஜி திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 2020 ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளிவந்த ’மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தை இயக்கி அப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் இயக்குநராகத் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், தற்போது ஆர்.ஜே பாலாஜி நடிக்கும் புதியப்படத்தின் தகவல் வெளியாகியுள்ளது. இவர் நடிக்கும் அடுத்த படத்தை குட் நைட் மற்றும் லவ்வர் போன்ற வெற்றி திரைப்படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக பதாகை வெளியிட்டுள்ளனர். ஆர் ஜே பாலாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு பதாகையை வெளியிட்டுள்ளனர்.