மட்டக்களப்பில் கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலையத்தில் இலங்கையில் முதல் முதலாக தமிழில் வேதங்கள் ஓதி இந்தியா மற்றும் இலங்கையிலுள்ள 21 கங்கை முதலான தீர்தங்களை கொண்டு திருக்கயிலாய பரம்பரை பேரூர் ஆதின குருமா சந்நிதான கயிலைப்புனிதர் முதுமுனைவர் சீர்வாளர் சீர் சாந்தலிங்க மருதாச்சல அடிகள் தலைமையில் பல இலங்கை இந்தியாவின் ஆதீனங்களின் சந்நியாசிகள் ஒன்றிணைந்து 20-06-2024 அன்று வியாழக்கிழமை திருநெறிய தெய்வத்தமிழ் திருக்குட நன்னீராட்டு பெருவிழா (கும்பாபிஷேகம்)இடம்பெற்றது
இந்த ஆலையத்தின் கும்பாபிஷேசத்திற்காக இந்தியாவின் கங்கை முதலான 12 புனித தீர்தங்களும் இலங்கையில் உள்ள திருக்கேதீஸ்வரம் பாலாவி முதலான 9 புனித தீர்தங்கள் கல்லடி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலையத்துக்கு கொண்டுவரப்பட்டு அங்கு விசேட பூஜை வழிபாட்டின் பின்னர் 21 கலசங்கள் மற்றும் 108 முளைப்பாரிகள் பெண்களால் சிறப்பு பிராத்தனையுடன் மதுரை அருள்மிகு சிறி மீனாட்சி அம்மன் ஆலைய தெய்வ நெறிகளக தலைவர் சிவானந்த சுந்தரானந்த சரஸ்வதி சுவாமி, திருவண்ணாமலை சடைச்சசாமி ஆச்சிரம 5 வது மடாதிபதி தவத்திரு திருப்பாத சுவாமிகள்.
திருநெல்வேலி ஸ்ரீமத் பரசமய கோளறிநாத 38 வது ஆதீன சன்னிதான ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி பீடம் புத்தாத்மானந்த சரஸ்வதி சுவாமிகள், இந்தியா அகில பாரதீய சன்னியாசிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் சுவாமி வேதசந்த ஆனந்த ஆச்சாரியார். திருவண்ணாமலை சடைச்சசாமிகள்; ஆச்சிரம தவத்திரு நிர்மாலானந்தர் சுவாமிகளை செவ்வாய்க்கிழமை (17) திருச்செந்தூர் முருகன் ஆலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர்
அதனை தொடர்ந்து தீர்தங்கள் யாகசாலையல் வைக்கப்பட்டு நேற்று புதன்கிழமை எண்ணெய் சாத்தல் இடம்பெற்றதுடன் யாகசாலையில் நான்கு கால பூஜை தமிழில் தேவங்கள் ஓதி யாகம் இடம்பெற்ற நிலையில் இன்று வியாழக்கிழமை காலையில் இந்தியாவில் இருந்து வந்த சந்நியாசிகள் ஆதினங்களின் மடாதிபதிகள் இலங்கையிலுள்ள சந்நியாசிகள், கலந்துகொண்டு இலங்கையில் முதல் முதலாக சந்நியாசிகளால் திருநெறிய தெய்வத்தமிழ் திருக்குட நன்னீராட்டு பெருவிழா (கும்பாபிஷேகம்) இடம்பெற்ற இந்த கும்பாபிஷேகத்தில் ஆயிக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.