தையிட்டியில் அமைந்துள்ள சட்ட விரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான தொடர் போராட்டமானது வெள்ளிக்கிழமை 21ம் திகதி அன்றையதினம் ஆரம்பமாகியுள்ளது.
குறித்த விகாரையானது பொதுமக்களது காணிகளை அபகரித்து அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ளது. எனவே அதனை அகற்றுமாறு கோரி ஒரு வருட காலமாக தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருக்கின்றது.
பௌர்ணமி தினத்தை முன்னிட்டு குறித்து விகாரையில் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட உள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பை வெளிக்காட்டும் முகாமாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.