(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்)
22.06.2024
தேசிய மொழி கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் IOLPS இணைந்து மன்னார் மாவட்டத்தில் அரச உத்தியோகஸ்தர்களுக்காக மேற்கொண்ட 100,150,200 மணித்தியாள பயிற்சி நெறியை பூர்த்தி செய்த அரச உத்தியோகஸ்தர்களுகான சான்றிதல் வழங்கும் நிகழ்வு மற்றும் கலை நிகழ்வு 22-06-2024 சனிக்கிழமை (22) மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி கேட்போர் கூடத்தில் சிரேஸ்ர மொழிப்பாட வளவாளர் சாகரிகா தலைமையில் இடம் பெற்றது.
2020 ஆண்டு அரச கரும மொழி அமைச்சினால் வெளியிடப்பட்ட 18 இலக்க சுற்றறிக்கைக்கு அமைவாக அரச உத்தியோஸ்தர்களின் மொழி புலமையை விருத்தி செய்யும் முகமாக மேற் கொள்ளப்பட்ட பயிற்சி நெறியை பூர்த்தி செய்த 2023,2024 ஆண்டில் பயிற்சியை நிறைவு செய்த பயிலுனர்களுக்கு சான்றிதல்கள் மேற்படி வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக மன்னார் மாவட்ட உதவி செயலாளர் டில்சன் பயஸ்,
மன்னார் மாவட்ட சிரேஸ்ர பொலிஸ் அத்தியட்சகர் அருண சந்திரபால, மற்றும் பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் உதயசந்திரன், சிரேஸ்ர மொழிபாட நெறி வளவாளர் தமிழ் செல்வம், தேசிய ஒருமைப்பாட்டு மேம்பாட்டு உதவியாளர் சிந்துஜா, இரண்டாம் மொழிபாட வளவாளர் சுபாஜினி விநாயகமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வில் சிங்கள கற்கை நெறிகளை பூர்த்தி செய்த பயிலுனர்களால் பல்வேறு கலை நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டு இடம் பெற்றது.
அதே நேரம் புதிய சிங்கள பாடநெறியானது வருகின்ற மாதம் ஆரம்பிக்க உள்ள நிலையில் பயிற்சி நெறியை தொடர விரும்புவோர் 0776355521 தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது .