சமீப காலமாக பெண்களும் மோட்டார் சைக்கிளை விரும்பி ஓட்டத் தொடங்கி உள்ளனர். இளம்பெண்கள் சிலர் உயர் ரக மோட்டார் சைக்கிள்களை அசத்தலாக ஓட்டிச் சென்ற காட்சிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு இணையத்தில் வைரலாகி இருந்தன .
இந்நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் சிவப்பு நிற சேலை அணிந்த பெண் ஒருவர் ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிளை ஓட்டிச் செல்லும் காட்சிகள் இணைய தளத்தில் வைரலாகி வருகின்றன.
ஜெட்டி பைக்கர்கேர்ள் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், பைக் நிறத்திற்கு தகுந்தவாறு சிவப்பு நிறச் சேலை அணிந்து கொண்டு அந்த பெண் பைக் ஓட்டி செல்லும் காட்சி பயனர்களை ரசிக்க செய்துள்ளது. இந்த பெண் இரு கைகளையும் விட்டு விட்டு பைக் ஓட்டி செல்லும் காட்சிகளும், ஒரு கையில் பைக்கை ஓட்டியவாறே மற்றொரு கையில் சேலையின் முந்தானையை ஸ்டைலாக சுற்றிக்கொண்டு பைக் ஓட்டிய காட்சிகளும் அதில் உள்ளன .
இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோ 2.13 லட்சத்திற்கும் அதிகமான விருப்பங்களை பெற்றுள்ளது. பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.