விஜய் சேதுபதியின் 50-வது திரைப்படமாக ‘மகாராஜா’ திரைப்படம் உருவானது. குரங்கு பொம்மை திரைப்படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் ரூ.20 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படுகிறது. இந்நிலையில், படம் வெளியாகி 10 நாட்கள் கடந்த நிலையில் உலகம் முழுவதும் ரூ.100 கோடியை வசூலித்துள்ளதாக திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.