செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட ஊடகவியலாளர்களுக்கு ஆளுநரின் ஊடகச் செயலாளர் இடையூறு விளைவித்ததுடன் அச்சுறுத்தலும் விடுத்தமை விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
25-06-2024 அன்றையதினம் சங்கானையில் அம்மாச்சி உணவகம் திறந்து வைக்கப்பட்டது. இதில் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உணவகத்தை திறந்து வைத்தார்.
இதன்போது செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட ஊடகவியலாளர்களுக்கு இடையூறு விளைவிக்கும் விதத்தில், ஆளுநரின் ஊடகச் செயலாளர் செயற்பட்டார். இடையூறு விளைவிக்க வேண்டாம் என ஊடகவியலாளர்கள் அந்த இடத்தில் ஆளுநரின் ஊடகச் செயலாளரிடம் கேட்டுக்கொண்டனர்.
உடனே அவர் “நீங்கள் யார்? ஊடகவியலாளர்களா? ஊடக அடையாள அட்டை இருக்கிறதா? எந்த ஊடகம்? எனக் கேட்டு அச்சுறுத்தும் விதத்தில் செயற்பட்டார். இதன்போது ஊடகவியலாளர்கள் தங்களை அடையாளப்படுத்த முயன்றபோது அங்கு வந்த ஆளுநரின் ஊடகப் பிரிவில் கடமை புரியும் ஒருவர் குறித்து ஊடகச் செயலாளருக்கு, அவர்கள் ஊடகவியலாளர்கள் தான் என்பதை உறுதிப்படுத்தியதுடன் சமரசப்படுத்தினார்.
பின்னர் குறித்த ஊடகச் செயலாளர் தொடர்ந்தும் இடையூறு விளைவிக்கும் விதத்தில் நடந்துகொண்டதை அவதானிக்க முடிந்தது.