– கிஷாலி பின்ரோ ஜயவர்த்தன- – தமிழாக்கம் சர்மிளா
இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒலிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் சட்டமூலத்தால் சீற்றமடைந்திருந்த தனது எதிர்ப்பாளர்களுக்கு பதிலடி கொடுத்தார். அவர் ஒரு ஊடக ‘பாதுகாவலர்’ என்றும், அந்தவகையில், இலங்கையில் குற்றவியல் அவதூறு சட்டங்களை நீக்கினார்.
ஜனாதிபதியின் உறுதிமொழிகள் மற்றும் பிரிட்டனின் முன்னுதாரணங்கள்
மோசமாக வடிவமைக்கப்பட்ட சட்டங்கள் பற்றிய கடுமையான பொது விமர்சனங்களால் வெளிப்படையாகத் தாக்கப்பட்ட ஜனாதிபதி, திசைதிருப்பும் ஒரு முயற்சியுடன் மறுத்தார். ஹோமாகம பிரதேச செயலகத்தில் சமுகமளித்திருந்தவர்கள் மத்தியில் உறுதியளித்த அவர், அரசாங்கத்தின் நோக்கம் ‘ஊடகங்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவும்’ சட்டங்களைக் கொண்டுவருவது மட்டுமே என்றார்.
அந்த முடிவில், ஐக்கிய இராச்சியத்தில் நடைமுறையில் உள்ள சட்டங்கள் மற்றும் நடைமுறைகளைப் பார்க்குமாறு அவரது அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. சட்டமாஅதிபருக்கு ‘பிரிட்டனின் விதிமுறைகளில் சட்டமூலத்தை முன்வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. ஏனெனில் அங்கு முடிவெடுப்பதில் முன்னுதாரணங்களைப் பெறலாம். குற்றவியல் அவதூறு சட்டத்தை ரத்து செய்த பிறகு, கருத்து சுதந்திரத்திற்கான உரிமையை நிலைநிறுத்துவதாக ஜனாதிபதி திடமாக உறுதியளிக்கிறார். ‘ஜனாதிபதி செயலகம், 2023 ஜூன் 15,).
நிச்சயமாக, ஜனாதிபதியின் ஊடகக் குழு அந்த வாக்கியத்தை பொது வெளியீடாக வடிவமைத்ததில் உள்ள கசப்பான மொழி விரும்பத்தக்கதாகவே இருந்தது.
இருந்தபோதிலும், ஒலிபரப்பு சட்டமூலம், பொது ஆலோசனையிலிருந்து வெளிப்படையாக வாபஸ் பெறப்பட்டது. எவ்வாறாயினும், ஹோமாகமவில் ஜனாதிபதி அந்த இலகுவான உறுதிமொழிகளுக்கு பொய்யை வழங்குவது அதன் பின்னரான அவரது அமைச்சரவையின் நடவடிக்கைகள் ஆகும். உதாரணமாக அருவருப்பான இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தை எடுத்துக் கொண்டால், அது ஒலி பரப்பு சட்டமூலத்தை மிக மோசமான வடிவத்தில் பின்பற்றுவதாகும்.
சட்டமியற்றும் வரைவு வேலை வெளிப்படையாக, இந்த சட்டமூலம் அதன் உள்ளடக்கங்கள் பகிரங்கப்படுத்தப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு, அதிர்ச்சியான வடிவத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கான உச்சகட்டத்தில் உள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் கைகளில், இந்த ஆவணம் ‘பிரிட்டனின் முன்னுதாரணங்கள்’ அல்லது வேறு எந்த முன்னுதாரணத்தின் மீதும் வரைவு செய்யப்பட்டதாக எந்தவித பாசாங்குகளும் இல்லை. முற்றுகையின் கீழ் ஒரு அரசியல் ஸ்தாபனத்தால் சட்டமியற்றும் வேலையாக இது திகழ்வதுடன் என்னகஷ்டம் ஏற்பட்டாலும் அவற்றுக்கு எதிராக அனைத்து பாதுகாப்புகளையும் திரட்ட தயாராகிறது.
அருவருப்பான முறையில் கட்டமைக்கப்பட்ட உட்பிரிவுகளின் ஒரு அடுக்கை நீங்கள் உரிக்கும்போது, அவை ‘சட்டத்தை உருவாக்கும்’ மற்றும் மோசமான சாகச முயற்சிகளால் பின்பற்றப்படுகின்றன.
ஐக்கிய இராச்சியத்தின் இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தை உற்று நோக்குமாறு ஜனாதிபதி தனது அமைச்சர்களுக்கு அறிவுறுத்தலாம். இது அதன் கொடூரமான இலங்கைப் பெயருக்கு அப்பாற்பட்ட உலகம்.
அதிகாரத்தில் இருப்பவர்களால் ‘இணையவழி பாதுகாப்புச் சட்டத்தின்’ உண்மையான சுயவிவரம் எப்படி இருக்கும் என்பதைப் படித்துப் புரிந்துகொள்ள முடியும். தற்செயலாக, பிரிட்டன் சட்டமூலம் இந்த மாதம் பாராளுமன்றத்தின் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அரசரின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. ஆனால், ஏனைய எல்லா வழிகளிலும், இது நாம் இங்கு காணும் கேலிக்கூத்தலில் இருந்து வேறுபட்டது.
உலகளாவிய சமூக ஊடக தளங்கள் மட்டுமின்றி வழக்கறிஞர்கள், ஆர்வலர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடனும் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் நீடித்த ஒரு விரிவான ஆலோசனை செயல்முறைக்குப் பிறகு பிரிட்டன் சட்டமூலம் வந்தது.
திகைப்பு மற்றும் அச்சத்திலிருந்து ஒரு அரசாங்கத்தை பாதுகாத்தல் அதன் உள்ளடக்கங்கள் கணிசமாக திருத்தப்பட்டன, பொது மக்களால். முன்மொழியப்பட்ட திருத்தங்கள், மக்கள்பிரதிநிதிகள் சபை மற்றும் பிரபுக்கள்சபை ஐக்கிய இராச்சியத்தின் தகவல் தொடர்பு அலுவலகம், அரச கட்டுப்பாட்டாளர், செயற் படுத்தல் மற்றும் அமு லாக்கத்தில் பணிபுரியும். சட்ட அமு லாக்க முகவர் சமூக ஊடக தளங்களில் பிள்ளைகளை ப் பாதுகாப்பதில் குறிப்பாக கவனம் செலுத்துவதன் மூலம் சட்ட விரோதமான இணையவழி உள்ளடக்கத்தை உடனடியாகச் சமாளிக்க சட்ட அமு லாக்க முகவரமைப்பு களுக்கு இந்தசட்டமூலம் உதவுகிறது.
இதற்கு நேர்மாறாக, இலங்கையின் சட்டமூலம், நான் பார்ப்பது போல், வெளிப்படையாகவே ‘அச்சத்துடன்’ இருக்கும் அரசாங்கத்தை, மற்றொரு ‘அரகலய ’ (பாரியளவிலான எதிர்ப்பு) சாத்தியப்பாட்டிற்குஎதிராக பாதுகாக்க முயல்கிறது. அங்கே நாம் சுருக்கமாக விட யம் உள்ளது. சட்டமூலத்தின் தெளிவற்ற மற்றும் நிச்சயமற்ற ‘நோக்கங்கள்’ கடந்த வாரம் விவாதிக்கப்பட்டன, இதில் ‘எச்சரிக்கை அல்லது துன்பகரமான’ அறிக்கைகள் எதுவாக இருந்தாலும், ஆட் களைப் பாதுகாப்பது அடங்கும்.
உண்மையில், அதன் நீண்ட தலைப்பு கூட கொடூரமான வார்த்தைகளால் ஆனது. ‘உண்மையின் சில அறிக்கைகளை’ தடை செய்வதே இதன் நோக்கம் என்று இது கூறுகிறது. ஆனால் சிங்கப்பூரில் உள்ள மிகக் கொடூரமான சட்டம், இணையவழி பொய்கள் மற்றும் கையாளுதல் சட்டத்திலிருந்து உலகெங்கிலும் உள்ள பேச்சு சுதந்திரத்திற்கு எதிரான எதேச்சதிகாரர்களின் மகிழ்ச்சியாக உள்ளது. ‘உண்மைகுறித்த பொய்யான அறிக்கைகளை’ தடைசெய்வது போன்ற அதன் நோக்கத்தை இன்னும் கேவலமாக அறிமுகப்படுத்துகிறது. சிங்கப்பூர் சட்டம் மோசமாக இருந்தால், முன்மொழியப்பட்ட இலங்கையின் சட்டமூலத் தின் மோசமானதன்மை எல்லையற்றது.
தீங்கிழைக்கும் வகையிலான வரைவு விதிகள்
தடைசெய்யப்பட்ட மற்றும் தவறான அறிக்கைகளை வரையறுக்கும் இலங்கை சட்டமூலத்தின் உட்பிரிவுகள் விரிவானவை. கடந்த வாரம் விவாதிக்கப்பட்டதைப் போல, சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சட்டத்தில் (ஐ.சி.சி.பி.ஆர் சட்டம், 2007) அதே தடைசெய்யப்பட்ட தன்மையும் இதில் அடங்கும், இது விமர்சகர்களுக்கு எதிராக இரக்கமின்றி ஆயுதம் ஏந்தப்பட்டது. மேலும் காயத்திற்கு அவமானம் சேர்க்கும் வகையில், எங்களிடம் ஏனைய உட்பிரிவுகள் உள்ளன.
சரத்து 14 ‘தவறான முறையில் அல்லது வேண்டுமென்றே தூண்டிவிட்டு கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் தவறான அறிக்கையை வழங்குவதைத் தடுக்கிறது.உண்மையான கலவரம் ஏற்படாவிட்டாலும், இந்தக் குற்றம் (குறைந்த தண்டனையுடன் இருந்தாலும்) எழுவதாகக் கருதப்படுவது மிகவும் ஆபத்தானதாக இல்லாவிட்டால் அதன் விளைவுவேடிக்கையாக இருக்கும். தேவைப்படுவதெல்லாம், சுயாதீனமற்ற இணையவழி பாதுகாப்பு ஆணைக்குழுவின் மதிப்பீடு மட்டுமே. உட்பிரிவு 15, 16 மற்றும் 17 ஆகியவை முறையே ஒரு மதக் கூட்டத்தின் ‘தொந்தரவு’ அல்லது வேண்டுமென்றே ‘காயம்’ மற்றும் ‘சீற்றம்’ மத உணர்வுகளை ஏற்படுத்தும் தவறான அறிக்கைகளுடன் தொடர்புடையது.
ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தின் குறைந்தபட்சம் பிரிவு 3 (1) குற்றத்தின் ஒரு பகுதியாக பாரபட்சம், விரோதம் அல்லது வன்முறைக்கு ‘தூண்டுதல்’ பரிந்துரைக்கிறது என்றாலும், பொலிசாரின் கைதுகள் மற்றும் வழக்குகள் அந்த அம்சத்தை எப்போதாவது கணக்கில் எடுத்துக்கொள்ளும். இருப்பினும், இந்த சட்டமூலத்தில் குற்றமாக கருதப்படும் செயல்களின் முட்டாள்தனம் புரிதலை மீறுகிறது. எந்த விதத்தில் ஒரு ‘தொந்தரவு’ அல்லது ‘நோக்கம்’ ‘காயம்ஃ சீற்றம்’ உணர்வுகளை குற்றமாக விளக்கலாம்?
அரச முகவர்களை வெறித்தனமாக செல்ல
அனுமதித்தல் ஏறக்குறைய ஒவ்வொரு நாளும், இலங்கைப் பிரஜைகள் அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளால் ‘சீற்றம்,’ ‘காயமடைந்த’ அல்லதுஇரண்டும் ‘கலந்த’ நிலையில் உள்ளனர். சட்டரீதியான பின்விளைவுகளைத் தீர்மானிப்பது போன்ற திட்டவட்டமான பேச்சுவழக்கு சொற்றொடர்களுக்கு இது ஒரு முட்டாள்தனம். இவ்வாறான குற்றச்செயல்கள் இலங்கையின் தண்டனைச் சட்டத்தை இருண்ட மற்றும் சோதிக்கப்படாத நிலைகளுக்கு இழுத்துச் செல்கின்றன. அரச முகவர்கள் காட்டுமிராண்டித்தனமாக செல் வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள வீச்சை மிகைப்படுத்த முடியாது.
இதற்கிடையில், ஒரு நபரை ‘அச்சுறுத்தல், பயமுறுத்துதல் அல்லது துன்புறுத்துதல்’ மற்றும் மிகவும் விசேட மாக, ‘ஒரு நபரின் கண்ணியத்தை மீறும்’ விளைவைக் கொண்ட எந்தவொரு செயல் தொடர்பாக . வேண்டுமென்றே தவறான அறிக்கைகளை வெளியிடுவதை 21 ஆவது பிரிவு தடை செய்கிறது.
பின்வரும் உதாரணங்கள் தனிப்பட்ட நபர்களுக்கிடையேயான உறவுகளுடன் தொடர்புடையவை, ஆனால் சரியான கடுமையான கட்டமைப்பில் இல்லாததால், இந்த சரத்து ஒரு ‘இலக்குவைக்கப்பட்ட நபரின்’ அரசியல் விமர்சனத்தை மறைக்கப் பயன்படுத்தப்படலாம். ஹோமாகமவில் ஜனாதிபதியின் கூற்று, கேள்விக்குரிய சரத்து ‘பொய்யான’ அறிக்கைகளுடன் மட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், கொள்கையளவில் அதை எதிர்க்க வேண்டும்.
அரசில் ஒரு பயங்கரமான முன்னுதாரணத்தை அமைத்தல் ஒட்டுமொத்தமாக, கூச்சமின்றி ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட (மற்றும் நிராகரிப்பு செய்யப்பட வேண்டிய) இணையவழி பாதுகாப்பு ஆணைக்குழு இந்த மிகவும் போட்டியிட்ட கேள்விகளை மதிப்பிடுகிறது. இங்குதான் இந்தசட்டமூலத்தின் திகில் உள்ளது. ‘எந்தவொரு நபராலும்’ தூண்டப்பட்டு, மீறல் குறித்து திருப்தி அடைந்த பிறகு, ஆணைக்குழு இயற்கை நீதியின் விதிகளைக் கடைப்பிடிக்கவும், குற்றம் சாட்டப்பட்டவரைக் கேட்கவும் கடமைப்பட்டிருக்காது.
அதற்கு பதிலாக, இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் கீழ்ப்படிய வேண்டிய உள்ளடக்கத்தின் புழக்கத்தைத் தடுக்க இது அறிவிப்பை வெளியிடலாம். இல்லையெனில், இணைய அணுகல் சேவை வழங்குநர் அல்லது இணைய இடைத்தரகரால் இதே போன்ற அறிவிப்பு வெளியிடப்படும். குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்திற்கு செல்ல முடியும், அதன் பிறகுதான், கிட்டத்தட்ட ஒரு பின் சிந்தனையாக. ‘இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள்’ ஆணைக்குழுவின் உத்தரவுக்கு கீழ்ப்படியாததற்கு ஐந்தாண்டு சிறை தண்டனை மற்றும்ஃஅல்லது அபராதம் விதிக்கப்படலாம்.
உண்மையிலேயே இதன் மூலம் பயமுறுத்துவது என்னவென்றால், இது எதிர்காலத்திற்கு அமைக்கும் ஓர் எதிர்கால எதேச்சாதிகாரதிற்கான முன்னுதாரணமாகும்