ரொறன்ரோ சென் போல்ஸ் தொகுதியின் இடைத்தேர்தல் முடிவு குறித்து ஊடகங்களுக்கு தெரிவித்த கனடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ
கடந்த வாரம் நடைபெற்ற ரொறன்ரோ சேன்போல் தொகுதிக்கான இடைத்தேர்தலில் லிபரல் கட்சி வெட்பாளர் லெஸ்லி சர்ச் தோல்வியடைந்ததும் கன்சர்வேட்டிவ் வேட்பாளர் டான் ஸ்டீவர்ட் சுமார் 600 வாக்குகள் வித்தியாசத்தில் பெற்றதும் நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.
இந்த முடிவைப் பயன்படுத்தி கொன்சர்வேர்ட்டிவ் கட்சியின் தலைமையும் அதன் உறுப்பினர்களும், கனடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.
இது தொடர்பாக பதிலளிக்கும் போதே பிரதமர் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் “கனேடியர்கள் அனைவரும் உறுதியானதும் உண்மையானதுமான முன்னேற்றத்தை எதிர்பார்த்து உள்ளார்கள் அதை அவர்களுக்கு வழங்க எனக்கும் எனது முழு லிபரல் அணிக்கும் இன்னும் நிறைய வேலைகள் உள்ளன என்பதை நான் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகின்றேன். வுpரை எமது கனடிய தேசம் இதைப் பார்க்கவும் உணரவும் முடியும்.” என்றார் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ.
“ கொன்சர்வேர்ட்டிவ் கட்சியின் வேட்டாளர் ஸ்டீவர்ட்டின் போராடிப்பெற்ற வெற்றிக்காகவும், சர்ச்சின் “நேர்மறையான பிரச்சாரத்திற்காகவும்” வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன் என்று குறிப்பிட்ட ஜஸ்ரின் ட்ரூடோ, அவரது எதிர்காலம் குறித்து இப்போது எழுப்பப்படும் பரந்த கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை.
“இது வெளிப்படையாக நாங்கள் விரும்பிய முடிவு அல்ல, ஆனால் மக்களின் கவலைகள் மற்றும் விரக்திகளை நான் தொடர்ந்தும் செவிமடுக்க விரும்புகிறேன் என்பதில் நான் தெளிவாக இருக்க விரும்புகிறேன்” என்று கூறினார். “எனது கவனம் உங்கள் வெற்றியில் உள்ளது, அது எப்போதும் அங்கேயேதான் இருக்கும்.”
ரொறன்ரோ சென் போல்ஸ் தொகுதியின் இடைத்தேர்தல் முடிவு தொடர்பாக ஊடகங்களுக்கு தெரிவித்த கனடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ மிகவும் உறுதி மிக்கவராக ஊடகங்களுக்கு பதிலளித்தார்.
கடந்த முப்பது ஆண்டு காலம் நீடித்த லிபரல் கட்சியின் இந்த தொகுதியில் வெற்றியானது 1993 முதல் இந்த தொகுதியை தங்கள் கைகளில் வைத்திருந்தனர். இந்த இடைத்;தேர்தலில் கொன்சர்வேர்ட்டிவ் கட்சி வேட்பாளர் ஸ்டீவர்ட் மொத்தம் 15,555 வாக்குகளுடன் 42.1 சதவீத வாக்குகளைப் பெற்றார், லிபரல் கட்சியின் வேட்பாளர் சர்ச் மொத்தம் 14,965 வாக்குகளுடன் 40.5 சதவீதத்தைப் பெற்றார்.
இறுதி முடிவுகள் அதிகாலை 4:00 மணிக்கு வெளிவந்தன, அதே நேரத்தில் தேர்தல்கள் கனடா திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் 36,962 செல்லுபடியாகும் வாக்குகளை கவனமாக எண்ணிய பின்னர் முடிவுகளை வெளியிட்டனர்.
மேற்படி சென்போல் தொகுதியில் கிடைத்த எதிர்பாராத இந்த தோல்வி ட்ரூடோவின் கட்சிக்கு ஒரு குறிப்பிடத்தக்க அடியாகும் என்று பலரும் விமர்சனம் செய்த வருகின்றனர். இது 2025 இல் நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலுக்கு முன்னால் அவரது தலைமையின் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றும் 192 வாக்குச் சாவடிகளைக் கொண்ட இடைத்தேர்தல் முடிவுகள், கன்சர்வேடிவ் மற்றும் லிபரல் கட்சிகளை மோதவிட்டன.
வரலாற்று ரீதியாக, லிபரல் பிரதிநிதிகள் இந்த தொகுதியில் 1993 முதல் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். லிபரல்களுக்கு இந்த இழப்பு அடுத்த கூட்டாட்சி தேர்தலுக்கு நல்லதல்ல என்றும் பலர் தெரிவிக்கின்ற நிலையில் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அவர்கள் மேற்கண்ட உறுதியான பதிலை வழங்கியுள்ளதை கொன்சர்வேர்ட்டிவ் கட்சியை சற்று சிந்திக்க வைத்துவி;ட்டது என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
ட்ரூடோவின் நிலை பலவீனமாகிவிட்டதாகவும், நாடு முழுவதும் உள்ள லிபரல்வாதிகளுக்கு எதிர்கால சவால்களைக் குறிக்கும் என்றும் பலர் நம்புகிறார்கள். பணவீக்கம், வீட்டு விலைகள் அதிகரிப்பு, குடியேற்றம் மற்றும் வாழ்க்கைச் செலவுகள் எல்லா நேரத்திலும் உச்சத்தில் இருப்பதால், ஜஸ்ரின் ட்ரூரோவின் புகழ் கணிசமாக சரிந்துள்ளது. லிபரல்வாதிகள் உள்ளூர் பிரச்சினைகளை திறம்பட கையாளத் தவறியது இந்த விளைவுக்கு ஒரு முக்கிய காரணமாகும் என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இது அடுத்த தேர்தல்களுக்கு அடுத்த “பாதுகாப்பான” இடங்களை ஏற்படுத்தலாம் மற்றும் லிபரல் தலைவர் என்ற தனது நிலையை மறுபரிசீலனை செய்ய ட்ரூடோவுக்கு அழுத்தம் கொடுக்கலாம். இரு கட்சிகளும் புதிய சவால்களை எதிர்கொள்ள வேண்டும், உள் அதிருப்தியை நிவர்த்தி செய்ய வேண்டும் மற்றும் எதிர்கால தேர்தல்களுக்கு வியூகம் வகுக்க தயாராக வேண்டும்.
அரசியல் பற்றுறுதிகள் தொடர்ந்து மாறுவது மற்றும் கனேடிய அரசியல் உருவாகும்போது, இந்த மாற்றங்கள் நாடு முழுவதும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். லிபரல்வாதிகள் நகர்ப்புற ஆதரவில் அவர்களின் படிப்படியான சரிவுக்கு பங்களிக்கும் காரணிகளைக் கவனிக்கத் தொடங்க வேண்டும், மேலும் அவர்களின் முன்னுரிமைகள் மற்றும் பிரச்சார உத்திகளை மறுமதிப்பீடு செய்யலாம்.
லிபரல் கட்சிக்கும் அதன் தலைவரும் தற்போதைய பிரதமர் ட்ரூடோவுக்கும் என்ன காத்திருக்கிறது என்பதை அடுத்த பொதுத்தேர்தல்; மட்டுமே சொல்ல முடியும் என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.