கட்சி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ்
(கனகராசா சரவணன்)
யுத்த காலத்தில் தென்னிலங்கையிலும் வடக்கு கிழக்கில் அப்பாவி மக்களையும் படுகொலை செய்த பிள்ளையானுடைய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தேர்தல் ஆணையாளர் உடன் தடைசெய்ய வேண்டும் என்பதுடன் விசாணை செய்யவேண்டும். அதேவேளை சர்வதேச ரீதியில் பயங்கரவாத பட்டியலில் சேர்க்கப்பட்டு தடைசெய்யப்படவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் ஆயுத பரிமாற்றம் இடம்பெற்றது தொடர்பாக தெரிவித்த கருத்து தொடர்பாக மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளர் 30-06-2024 அன்று ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தா.ர்
மட்டக்களப்பு மாவட்டத்துக்கு அண்மையில் விஜயம் செய்த ஜே.வி.பி கட்சியிலின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடவுள்ள அனுர குமார திஸநாயக்கா இரரிhங்க அமைசசர் பிள்ளையான் மக்களை அச்சுறுத்தி அரசியல் செய்துவருவதாக குற்றச்சாட்டு தெரிவித்தார்
இரண்டு தரப்பும் இரண்டு அரசியல் கட்சிகள் இவர்கள் ஜனநாயக நீரோட்டத்தில் மக்களுக்கு சேவை செய்யவேண்டும் ஆனால் இவர்கள் ஆயுதங்களை வைத்துக் கொண்டு மக்கள் மத்தியில் ஜனநாயத்தை காட்டிக் கொண்டு ஒரு வன்முறையில் ஈடுபட்டுள்ள விடையம் அப்பட்டமாக ஆயுத பரிமாற்றம் இடம்பெற்றிருக்கின்றதை என்பதை உறுதிபடுத்துகின்றது.
கடந்த யுத்த காலங்களில் தென்பகுதியில் இந்த ஆயுதங்களை பயன்;படுத்தி அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் அதேபோல வடக்கு கிழக்கிலும் அப்பாவி மக்கள் புத்திஜீவிகள், படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் இரவீந்தரநாத், ஜோசெப் பரராஜசிங்கம், மனித நேய பணியாளர்கள் 17 பேர் படுகொலை மற்றும் பல சிறுவர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டடுள்ளமை இவ்வாறு கடத்தல்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளது தொடர்பாக பல குற்றச்சாட்டுகள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பிள்ளையான் மீது உள்ளது.
ஆகவே இன்றைக்;கு இந்த ஆயுத பரிமாற்றம் இடம்பெற்றுள்ளது என்பதை ஒத்துக் கொண்டுள்ளமையால் இந்த படுகொhலைகளை சேர்ந்தவர்கள் செய்துள்ளனர் என வெளிப்படையாக இருக்கின்றது
யுத்தகாலத்தில் தென்பகுதயில் நடந்த படுகொலைகள் அதேமாதிரி வடக்கு கிழக்கில் நடந்த படுகொலைகள் மூலம் கடந்த கால ஆட்சியாளர்கள் விடுதலைப் புலிகள் மீது தூக்கி போட்டனர் ஆனால் இந்த ஆயுத பரிமாற்றம் மூலம் உறுதிபடுத்தப்படுகின்றது இந்த அனைத்து படுகொலைகளையும் இந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தரப்புக்களால் செய்யப்பட்டு விடுதலைப் புலிகள் மீது போடப்பட்டுள்ளது
அதேவேளை இந்த ஆயுத பரிமாற்றம் ஒரு விடையம் உறுதிப்படுத்தப்படுகின்றது கடந்த காலங்களில் தென்னிலங்கையில் அப்பாவி மக்களை கொலை செய்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அதேநேரத்தில் வடக்கு கிழக்கில் நடந்த அத்தனை படுகொலைகளும் குறப்பாக கிழக்கு மாகாணத்திலே வீதிகளிலேஅப்பாவி பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் சுட்டு கொல்லப்பட்டனர் ஊடகவியலாள், அரசில்வாதிகள் படுகொலை செய்யப்பட்டனர் இங்கு இருக்கின்ற துணை இராணுவத்துடன் செயற்பட்ட பிள்ளையான்; குழு தான் இந்த படுகொலையை செய்துள்ளனர்;
இவ்வாறு படுகொலைகளை செய்த இவர்கள் இவர்கள் பயங்கரவாத பட்டியலில் சேர்க்கப்பட வேண்டியவர்கள். ஆனால் உரிமைக்காக போரடிய புலிகளை அமெரிக்கா, இந்தியா பயங்கரவாத பட்டியலில் சேர்த்துள்ளதுடன் நாட்டிலும் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே உரிமைக்காக போராடிய விடுதலைப் புலிகளை இந்த பயங்கரவாத பட்டியலில் இருந்து நீக்கவேண்டும்
எனவே ஒரு ஜனநாகய கட்சியாக இருக்கின்றவர்கள் இப்படிபட்ட சட்டவிரோத ஆயுத பரிமாற்றத்தில் ஈடுபடமுடியாது இது சர்வதேச சட்டத்துக்கு முரணான விடையம் ஆகவே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உடனடியாக தேர்தல் ஆணையாளர் தடைசெய்யப்படவேண்டும் உடனடியாக விசாரணைக்கு உட்படுத்தபடவேண்டும் சர்வதேச மட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அமைப்பு தடைசெய்யப்படவேண்டும் இவர்து அலுவலகங்கள் சோதனையிடவேண்டும் பயங்;கரவாத பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றார்.