நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் புதிய படம் கோட். இந்த படத்தின் பதாகை மற்றும் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றன. இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி வந்தது. அதன்படி இந்த படத்தின் வி.எஃப்.எக்ஸ். பணிகள் அமெரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். விஜய்யின் கோட் படம் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
![கோட் படத்தின் புது பதிவேற்றம் - வெங்கட் பிரபு](https://uthayannews.ca/wp-content/uploads/2024/04/Vijay-Goat-padam-director-venkat-prabhu.jpg)