இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் மறைவினால் ஏற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு சண்முகம் குகதாசனின் பெயர் வர்த்தமானியில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது
2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு இரா.சம்பந்தனிற்கு அடுத்தபடியாக சண்முகம் குகதாசன் அவர்கள் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் இடப்பெற்றிருந்தார்.
அந்த தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தேர்வான இராஜதவரோதயம் சம்பந்தனின் தற்போதைய மறைவால் ஏறபட்ட வெற்றிடத்திற்கு இலங்கை அரசின் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ச.குகதாசன் பொதுத் தேர்தலில் 16,770 விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தார் என்பதும் இவர் கனடாவில் பல வருடங்கள் வாழ்ந்து பல சமூக மற்றும் அரசியல் செயற்பாடுகளில் முன்னணியில் திகழ்ந்தார் என்பதும் பின்னர் தாயகம் சென்று இருர். சம்பந்தன் அவர்களோடு இணைந்து அவருககு செயலாளராகவும் பணியாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கனடா தமிழீழச் சங்கத்தின் ஊதியம் பெறும் உத்தியோகத்தராகவும் திரு குகதாசன் பணியாற்றினார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.