முல்லைத்தீவு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் தரம் ஒன்பதில் கல்வி கற்கும் மாணவனின் தலையில் ஆசிரியர் தாக்கியதால் பாடசாலை செல்வதற்கு மாணவன் மறுப்புத் தெரிவித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் தெரிய வருவது,
கடந்த 19 ஆம் திகதி குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் மாணவன் ஒருவர் மீது ஆசிரியர் தலையில் தாக்கியுள்ளார்.
இந்நிலையில் குறித்த மாணவன் பாடசாலை செல்வதற்கு மறுப்புத் தெரிவித்து வரும் நிலையில் சம்பவத்துடன் தொடர்பட்ட ஆசிரியருடன் பெற்றோர் சந்திப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அதிபர் குறித்த ஆசிரியருடன் தாம் பேசுவதாக தெரிவித்ததாக பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
எனினும் தமது பிள்ளைக்கு இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் குறித்த ஆசிரியர் தம்முடன் கலந்துரையாடாத நிலையில் குறித்த விடயம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிசாருக்கு தகவல் தெரியப்படுத்திய நிலையில் பொலிசார் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை குறித்த மாணவனையும் பெற்றோரையும் பொலிஸ் நிலையம் அழைத்து விசாரித்துள்ளனர்.
இதன் போது குறித்த மாணவனை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு பொலிசார் அறிவுறுத்தல் வழங்கியதாக பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.