ஸ்காபுறோ தமிழ்ச் சமூக மையத்திற்கான நிதி சேகரிப்புக் குழுவின் சார்பில் வர்த்தகப் பிரமுகர் சாந்தா பஞ்சலிங்கம் தெரிவிப்பு
“ஸ்காபுறோ நகரில் எமது சமூகத்திற்காக அமையவுள்ள தமிழச் சமூக மையம் பற்றி எமது கனடா வாழ் தமிழர்கள் அனைவரும் அறிந்திருப்பார்கள் என்பது எமது நம்பிக்கை. இந்த விடயத்தில், ரொறன்ரோவில் வாழுகின்ற அனைத்து தமிழ்க் குடும்பங்களையும் உள்ளடக்கிய எமது சமூகத்தின் பங்களிப்போடே. ஸ்காபுறோ தமிழ்ச் சமூக மையத்தை’ கட்டி எழுப்ப தற்போது மிக வேகமாகவும் விவேகமாகவும் செயற்படும் அமைப்புக் குழுவினராகிய நாங்கள் விரும்புகின்றோம். எனவே இங்கு வாழும் தமிழ்க் குடும்பங்கள் அல்லது தனி நபர்கள் ஆகியோரில் சுமார் 2500 பேரிடமிருந்து நாங்கள் பத்தாயிரம் டாலர்களை பெற்றுக் கொள்வதன் மூலம் அதன் மூலம் நாம் 25 மில்லியன் டாலர்களை சேகரித்து எமது திட்டத்தை நாம் பூரணமாக கட்டி முடிக்கலாம் என்று நம்புகின்றோம்”
இவ்வாறு 03-07-2024 அன்று புதன்கிழமையன்று மார்க்கம் ந கரில் டிஅமைந்துள்ள கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பு நிகழ்ச்சியொன்றில் உரையாற்றிய ஸ்காபுறோ தமிழ்ச் சமூக மையத்திற்கான நிதி சேகரிப்புக் குழுவின் சார்பில் வர்த்தகப் பிரமுகர் சாந்தா பஞ்சலிங்கம் தெரிவித்தார்.
மேற்படி நிகழ்வில் தமிழ்ச் சமூக மையத்தின் தற்போதை இயக்குனர் சபையின் சார்பில் தீபிகா மற்றும் குபேஸ், ரமணன், ஜெயக்குமார். சாந்தா பஞ்சலிங்கம் உட்பட கனடிய தமிழர் தேசிய அவையின் பிரதிநிதி ஒருவரும் கலந்து கொண்டனர்.
அங்கு உரையாற்றிய அனைவரும் மேற்படி தமிழ்ச் சமூக மையத்திற்கான கட்டிட நிதியாக கனடாவின் மத்திய- மாகாண மற்றும்ரொறன்ரோ உள்ளாட்சி அரசுகளின் சார்பில் கிடைத்துள்ள 23 மில்லியன் டாலர் நிதி உதவியானது எமது தமிழ்ச் சமூகத்திற்கு கிடைத்த ஒரு பெரும் கொடை என்றும் அதற்கு மேலாக இந்த திட்டத்தை பூர்த்தி செய்ய தேவையான முழுமையான நிதியையும் வர்த்தக சமூகம் உ ள்ளடங்கிய எமது தமிழ்ச் சமூகத்திற் பங்களிப்பை நம்பியிருப்பதாகவும், அமையவுள்ள தமிழச் சமூக மையத்திற்கு எமது சமூகத்தின் முழுமையான பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதை நிதி சேகரிப்புக் குழு நன்கு உணர்ந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய சாந்தா பஞ்சலிங்கம் அவர்கள் தனதும் ஏனைய இயக்குனர் சபை உறுப்பினர்கள் சார்பிலும் தனது கருத்துக்களை தெரிவித்தார்.”
“எமது சமூகத்தில் உள்ள வர்த்தக பிரமுகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் ஆகியோர் தங்கள் பங்களிப்புக்களை பெருமளவில் வழங்க உறுதியளித்துள்ளனர். ஆனால் அது மட்டுமன்றி, சுமார் 2500 தமிழ் பேசும் குடும்பங்களின் பங்களிப்புடன் கனடிய தமிழ்ச் சமூகத்தின் சார்பில் நாம் திரட்ட வேண்டிய 25 மில்லியன் டாலர்களை எமது இயக்குனர் சபையும் நிதி சேகரிப்புக் குழுவும் சேகரிக்க இங்குள்ள தமிழ் மொழி சார்ந்த ஊடகங்களையும் பத்திரிகைகளை வெளியிடும் நிறுவனங்களையும் வேண்டுகின்றோம்” என்று தெரிவித்தார்