மேற்படி சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டமும், ஒன்று கூடலும் ஸ்காபுறோ நகரில், பிஞ்ச், நீல்சன் வீதி சந்திப்பில் அமைந்துள்ள, நீல்சன் பூங்காவில்,(NEEILSON PARK) எதிர் வரும் 14 ம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) யூலை மாதம், 2024 காலை 09.00 மணிக்கு, போஷகர் திரு .ம.வசந்தமார் அவர்கள் ஒருங்கிணைப்பில், திரு.கந்தையா கௌரிநாதன் அவர்கள் தலைமையில் ஆரம்பமாகி நடைபெறும்.
அன்றைய தினம் திரு ராஜ்குமார் இராசையா அவர்கள், (HOME LIFE /REALTY INC ) விற்பனை பிரதிநிதி பிரதம விருந்தினராக கலந்து சிறப்பிக்கின்றார்.
பொழுது போக்கு நிகழ்வாக,சிறுவர்கள், பெரியவர்களுக்கான விளையாட்டு போட்டி நடைபெற்று, பரிசில்கள் வழங்கப் படும்.
மதிய உணவு வழங்கப்படும்.
அன்றைய தினம் புதிய நிர்வாக சபைதெரிவும் நடை பெறும்.
ஆகவே இலங்கை போக்குவரத்து சபை முன்னாள் ஊழியர்கள், அனைவரும் தங்களது குடும்பத்துடன் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
மேலதிக தொடர்புகளுக்கு.
தலைவர்.க.கௌரிநாதன்.
416671 1084
செயலாளர். வே.மகேஸ்வரன்
514 240 1478