தமிழ்ச் சமூக மைய நிதிச் சேகரிப்புக் குழுவின் சார்பில் உறுப்பினர்கள் அனைவரும் வேண்டுகோள்
“கனடியத் தமிழர்களின் கனவான ‘தமிழ்ச் சமூக மையம்’ நிஜமாக எழுந்து நிற்பதற்கு, எமது மக்களின் பங்களிப்பு இன்னும் அதிகளவு தேவைப்படுகின்றது. கனடாவின் மத்திய அரசுமற்றும் ஒன்றாரியோ மாகாண அரசு ஆகியவை வழங்கிய நிதி ஒதுக்கீடுகள் மற்றும் எமது சமூக உறுப்பினர்களின் மத்தியிலிருந்து நாம் திரட்டிய நிதி அனைத்தையும் தவிர்த்து எமக்கு 25 மில்லியன் டாலர்கள் தேவைப்படுகின்றது. அதைப் பெற்றுக்கொள்வதற்கு எமது தமிழ்ச் சமூகத்தின் 2500 குடும்பங்களிடமிருந்து தலா 10000 டாலர்களைத் திரட்டி அந்த தொகையை ஈடுசெய்து கொள்ளலாம் என்று நாம் எதிர்பார்த்து நிற்கின்றோம்.
ஆனால் அந்த முயற்சி ஆமை வேகத்தில் தான் செல்கின்றது. எனவே எமது கனடா வாழ் தமிழ் மக்கள் எமது முயற்சிக்கு பச்சைக் கொடி காட்ட வேண்டும்.”
இவ்வாறு கனடா ஸ்காபுறோ நகரில் அமையவுள்ள தமிழ்ச் சமூக மைய நிதிச் சேகரிப்புக் குழுவின் சார்பில் அதன் உறுப்பினர்கள் அனைவரும் வேண்டுகோள் விடுத்தனர்.
10-07-2024 புதன்கிழமை மாலை ஸ்காபுறோ ஜேசிஎஸ் மண்டபத்தில் நடைபெற்ற தமிழ் மக்களுக்கான ஒன்று கூடல் மற்றும் இராப்போசன விருந்து ஆகியவற்றை நடத்திய மேற்படி நிதிக் குழுவினர் தொடர்ந்து அங்கு கலந்து கொண்டவர்களிடமும் நேரடியாக உரையாடினர்.
மேற்படி நிதிக்குழுவில் அங்கத்துவம் வகிக்கும் எட்டு அன்பர்களும் அங்கு வருகை தந்து எமது தமிழ் மக்களின் எதிர்காலத்தில் ஒரு அடையாளமாக விளங்கவுள்ள இந்த தமிழ்ச் சமூக மையம் நிதர்சனமாக அழகுடன் எழுந்து நிற்கும் வகையில் எமது நிதிச் சேகரிப்புக் குழுவினரோடு அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர்.
Contact: 416 200 5470