2020-ம் ஆண்டு ஆர்.ஜே.பாலாஜி, என்.ஜே.சரவணன் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘மூக்குத்தி அம்மன்’. இந்தப் படத்தில் நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் இப்படத்தை தயாரித்திருந்தார். ஆர்.ஜே.பாலாஜி, ஊர்வசி, ஸ்மிருதி வெங்கட், மயில்சாமி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். கிரிஷ் இசையமைத்துள்ள இப்படம் தற்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்திலும் அம்மன் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார் என்று படக்குழு தெரிவித்துள்ளது. நயன்தாரா நடிப்பில் அடுத்து ‘டெஸ்ட்’, ‘மண்ணாங்கட்டி’, ‘டீயர் ஸ்டூடண்ட்ஸ்’ ஆகிய படங்கள் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
![நயன்தாரா நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தின் 2-ம் பாகம்!](https://uthayannews.ca/wp-content/uploads/2024/07/nayaba.jpg)