“இதுவே நீதி இலக்கியத்தின் நிலைத்த பெருமை” என கவிஞர் வைரமுத்து பெருமிதம்
தேனி மாவட்டம் கெங்குவார்பட்டியில் உரத் தொழிற்சாலை இன்றின் வளாகத்தில் திருவள்ளுவர் சிலையை, கவிஞர் வைரமுத்து திறந்து வைத்தார். அமைச்சர் ஐ.பெரியசாமி, தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி ஆகியோர் உடன் கலந்து கொண்டனர். அப்போது வைரமுத்து பேசியதாவது:-
“தமிழர்களின் ஞான அடையாளமாக ஈராயிரம் ஆண்டுகள் நின்று நிலவும் திருவள்ளுவரை ஒவ்வொரு தமிழனும் உச்சிமேல் வைத்து மெச்சிக் கொண்டாட வேண்டும்.
இந்திய அரசமைப்புச் சட்டம் கடந்த 74 ஆண்டுகளில் 107 முறை திருத்தப்பட்டிருக்கிறது.
ஆனால், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட திருக்குறளில் ஒரு வார்த்தைகூடத் திருத்தப்படவில்லை மற்றும் நகர்த்தப்படவில்லை என்பதே அந்த நீதி இலக்கியத்தின் நிலைத்த பெருமை.
இந்தத் தொழிற்சாலை ஒவ்வொரு நாளும் ஒரு திருக்குறள் சொல்லித் தொடங்கட்டும்.”
இவ்வாறு அவர் பேசினார்.