காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறுகையில், நீட் தேர்வு ஒரு ஊழல், இதை நாங்கள் கடந்த 3-4 ஆண்டுகளாக கூறி வருகிறோம்.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநில அரசால் நடத்தப்படும் கல்லூரிகளுக்கு மாணவர்களை தேர்ந்தெடுக்க ஒவ்வொரு மாநிலமும் அதன் சொந்த நுழைவு தேர்வை நடத்தும் உரிமையைப் பெற்றிருக்க வேண்டும். அகில இந்திய அளவில் தேர்வு நடத்தினால், இந்த ஊழல்கள் கண்டிப்பாக நடக்கும். அகில இந்திய தேர்வை அரசு கைவிட்டு, மாநிலங்களை சேர்க்காமல் மத்திய அரசு நிறுவனங்களுக்கு மட்டும் நடத்த வேண்டும் இது மிகப் பெரிய நாடு, தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்கள் இந்த முறையை பயன்படுத்திக் கொள்வதில் பலர் ஆர்வம் காட்டுகின்றனர். அமைப்பு மற்றும் அமைப்பில் உள்ள கசிவுகளுக்கு தர்மேந்திர பிரதான் தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.