பு.கஜிந்தன்
உலக வாழ் இந்து மக்களால் அனுஸ்டிக்கப்படும் ஆடிப்பிறப்பு நாளை முன்னிட்டு, ஆடிப்பிறப்புக்கான பொருட் கொள்வனவு செய்வதில் யாழ்ப்பாணத்தில் டிமக்கள் மிகவும் ஆர்வம் காட்டிவருகின்றனர்..
ஆடிப்பிறப்பினை முன்னிட்டு யாழ்ப்பாண நகரின் பலசரக்கு கடைகள், மற்றும் சந்தைப்பகுதி களிலும் பொருட்கொள்வனவு செய்வதில் அதிகம் ஆர்வம்காட்டிவருகின்றனர்.
யாழ்ப்பாணம் . நல்லூர், திருநெல்வேலி சந்தையிலும் பலசரக்கு வியாபார நிலையங்களிலும் ஆடிப்பிறப்புக்கான ஆடிக்கூழ் தயாரிப்பதற்காக பனங்கட்டி குட்டான், பயறு, அரிசி, மா, கச்சான், கஜூ, ஏலக்காய், , முந்திரியவத்தல் போன்ற பொருட்களை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
யாழ் நல்லூர் திருநெல்வேலி சந்தையில் பெரிய பனங்கட்டி குட்டான் ஒன்றின் விலை 140, ரூபாவுக்கும் சிறிய பனங்கட்டி குட்டான் 120 ரூபாக்கு விற்பனை செய்யப்படுகின்றது என பனங்கட்டி குட்டான் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.