உ.பி.யின் கோண்டா மாவட்டத்தில் பயணிகள் ரயிலின் 12 பெட்டிகள் தடம்புரண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர், 7 பேர் காயமடைந்தனர்.
சண்டிகரில் இருந்து அசாமின் திப்ருகார்க் நகருக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலின் 4 பெட்டிகள் உட்பட 12 பெட்டிகள் உ.பி.யின் கோண்டா மாவட்டத்தில், பிகவுரா என்ற இடத்தில் தடம் புரண்டது. அதில் 4 பயணிகள் இறந்தனர், 7 பேர் காயமடைந்து உள்ளனர். தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்து காரணமாக அந்த வழியில் போக்குவரத்து முழுவதும் தடைபட்டு உள்ளது. ரயில் விபத்து குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் யோகி ஆதித்யநாத், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபடவும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார். ரயில் விபத்து தொடர்பாக அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மாவிடம் அதிகாரிகள் விளக்கி உள்ளனர். மாநில அரசு, ரயில்வே அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.