குமுளன்
கனடாவிற்கு வருகை தந்துள்ள இலக்கியச் செயற்பாட்டாளர் விருபா து.குமரேசனின் நற்பணிகளை உள்வாங்கி கனடா வன்னிச்சங்கம் அவரைக் கௌரவித்து அவரது தமிழ்பணியைப் பாராட்டி கடந்த 14.07.2024 அன்று ஒரு வைபவத்தை நடத்தியது. 3500 McNicoll Avenue வில் உள்ள வன்னிச் சங்கத்தின் தலைமை அலுவலக மண்டபத்தில் இந்த நிகழ்வு மதிய உணவோடு இடம்பெற்றது.
.அதில் வன்னியில் 1983ம் ஆண்டு பேராசிரியர் சு.வித்தியானந்தன் தலைமையில் நடைபெற்ற ‘வன்னிப் பிராந்திய தமிழாராய்ச்சி மகாநாட்டுக்கான கட்டுரைகளை திரட்டி 40 ஆண்டுகளுக்கு பின்னர் நூலுருவாக்கி அந்த ‘ஆய்வுத்தொகுதி’ வெளிக்கொண்டுவரப்பட்டிருப்பது மிகவும் கவனத்தைப் பெற்ற விடயமாகும். தனதுநேரத்தையும் பொருளையும் கவனத்திற்கெடுக்காது அர்ப்பணிப்போடு செயற்பட்டுள்ளார் விருபா து.குமரேசன். அவர் வடமராட்சியை பிறப்பிடமாக் கொண்டவர். தெல்லிப்பளைப் பிரதேசத்தைப் புகுந்த இடமாகக் கொண்டவர். நாட்டின் நிலைமைகாரணமாக இந்தியாவில் குடியேறியவர். அங்குதான் அவரது தமிழ் மீதான அக்கறையும் பிடிப்பும் ஈர்ப்பும் அவரை பணியாற்ற வைத்துள்ளது. கணினித் துறையில் கல்வியை மேற்கொண்ட அவர் ஆர்வம் காரணமாக தமிழியல் துறையில் நாட்டம் கொண்டு தமிழாராய்ச்சி மன்றம், விக்கிபீடியா போன்றவற்றோடு இணைந்து செயற்பட்டு வருவதையும் ‘விருபா தமிழ் புத்தகத் தகவல் திரட்டு’ என்னும் இணையத்தளத்தையும் இயக்கி வருகின்றார். அவரது இணையத்தளத்தில் பயனுள்ள பல்வேறு செய்திகளையும் தந்து வருகின்றார்.
இந்த விழாவிற்குத் தலைமைதாங்கி நடத்திய முன்னைநாள் பேராசிரியர் நா. சுப்பிரமணியன் தனது உரையில் விருபா குமரேசனனின் பணி மிகவும் பாராட்ப்படவேண்டிய பணி. அவர் யாரும் செய்யாத நற்பணிகளை ஆற்றிவருகின்றார். சென்னையில் வாழ்ந்துவரும் அவர் 40 ஆண்டுகளுக்குப் பின்னர் 1983ல் நடந்த வன்னிப் பிராந்திய தமிராராய்ச்சி மகாநாட்டு ஆய்வுத் தொகுதியைக் கொண்டு வந்திருப்பது மிகவும் பயனுள்ளது. பல்கலைக்கழகத்து ஆராய்ச்சி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள ஒரு தொகுதியாக இது வெளிவந்திருப்பது வன்னி மக்களுக்கு மட்டுமல்ல இலங்கையில் உள்ளவர்களின் வரலாற்றை பல்துறைகளிலும் அறியக்கூடிய பதிவாக உள்ளது. நானும் இந்த மகாநாட்டில் கலந்துகொண்ட கட்டுரை வாசித்துள்ளேன் நேரடியாக அனுபவமும் பெற்றுள்ளேன் என உரையாற்றினார். இந்தப் பதிப்பை பேராசிரியர் எஸ்.பத்மநாதன் அவர்களை முன்வைத்து பதிப்பாசிரிராகக் கொண்டு குமரேசன் வெளிக்கொண்டுவந்திருக்கின்றார். அவருக்கும் வன்னிக்கும் தமிழன் என்ற தொடர்பைத்தவிர வேறு எதுவும் இல்லை என்று அவரது பணிகளைப் பாராட்டி அவருக்கு பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்.
அவரைத் தொடர்ந்து கனடா எழுத்தாளர் இணையத்தின் தலைவர் அகணி சு
ரேஸ் அவரது தமிழ்பணியைப் விதந்துரைத்து பொன்னாடைபோர்த்திப் பாராட்டினார். தொடர்ந்த வன்னிச் சங்கத் தலைவர் சிவா இரத்தினசிங்கம் வன்னிச் சங்கத்தின் சார்பாகப் பொன்னாடைபோர்த்தி வாழ்த்தினார்.
முன்னைநாள் வடக்குக்கிழக்கு பிரதம செயலாளராகவம், கல்வி கலாச்சாரப் பணிப்பாளராகவும் கடமையாற்றிய திரு. க. சண்முகலிங்கம் உரையாற்றுகையில அவர் செய்த அளப்பெரும் சேவைகளை எடுத்தக்கூறி பாராட்டினார். குறிப்பாக இதுவரை வெளிவந்த கட்டுரைகள் பற்றிய ஒரு பாரிய திரட்டை தாயாரித்து அதனை யாழ்பல்கலைக்கழகத்தின் மூலம் வெளியிட முன்வந்துள்ளதையும் எடுத்துக்காட்டி அந்த நூலின் முக்கியத்துவத்தையும் எடுத்துக் கூறினார். அவர் இந்தியாவில் வாழ்ந்தாலும் புதிதாக வரும் நூல்களை இலங்கைப் பாடசாலைகள் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகின்றார். இந்த வன்னிப் பிரதேச ஆய்வுத் தொகுதி உண்மையிலேயே பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இதனைஅடிப்படையாகக் கொண்டுஅவர்கள் தங்கள் ஆய்வுகளை மேற்கொள்ளக்கூடிய ஒரு வாய்ப்பை இந்த நூல்தொகுதி தந்துள்ளது. பேராசிரியர் சு.வித்தியானந்தன் அவர்கள் செய்த நற்பணிகளில்இலங்கையில் வன்னி,மட்டக்களப்பு போன்ற பிரதேசங்களில் மாநாடுகளை நடத்தி அப்பிரதேசங்கள் பற்றிய கட்டுரைகளை பதிவாக காரணாக அமைந்தவர். என்றார்
வாட்டலூ இலத்திரனியல் பேராசிரியர் சி.எஸ்.செல்வகுமார் அவர்கள் தனது உரையில் விருபா குமரேசனோடு இணைந்து விக்கிபீடியாவில் பணியாற்றியுள்ளேன். அவர் தமிழ் மீதுகொண்ட அக்கறையோடு செயற்பட்டு வருகின்றார். தமிழாராய்ச்சி மகாநாட்டு மையத்தோடு மிக நெருக்கமாக இணைந்து செயற்பட்டு வருகின்றார். அதற்கான பல்வேறு வழிகளில் அவர் தனது அளப்பரிய நேரத்தையும் செலவிடுகின்றார். அவரது பணி தமிழ் மக்களுக்கு வரலாற்றில் அழிக்கமுடியாத இடத்தைப் பிடிக்கும் என்றுரைத்தார்.
தொடர்ந்து முன்னை யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் பாலசிவகடாட்சம் அவர்கள் உரையாற்றும் போது நண்பர் சிவபாலு விருபா து.குமரேசன். அவர்களை எனது வீட்டிற்கு அழைத்துவந்தார். அப்போதுதான்நான் அவரை முதன் முதலில் கண்டு உரையாற்றினேன். தமிழுக்காக அவர் ஆற்றிவரும் பங்களிப்பு உண்மையிலேயே வியக்கவைக்கின்றது. சங்க இலக்கியங்களை இன்று கிடைக்க வழி வகுத்தவர் இவரே. ‘ஏடு திருப்புபேவார்’ எனப்படும் ஏட்டை ஒருவர் வாசிக்க அதனைக் கேட்டு எழுதிக்கொடுத்தமையாலேயே இன்று அவை எமக்குக்கிடைக்கின்றன. அவர்களின் பணி எத்துணை முக்கியத்துவமோ அத்துணை முக்கியமான பணியை விருபா குமரேசன் அவர்கள் செய்துவருகின்றார் என்று பாராட்டினார். அவரது பணிகளை முன்வைத்துப் பாராட்டுவிழா எடுத்துள்ள வன்னி சங்கத்தினரைப் பாராட்டாமல்விட முடியாது. விருபா குமரேசனது தமிழ்ப்பணி தொடர வாழ்த்தி என உரைத்தார்.
தொடர்ந்து உரையாற்றிய சிவபாலு, “விருபா குமரேசன் நான் கடந்த 2023ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நின்றபோது என்னுடன் தொடர்பு கொண்டார். எனதுவீடு தேடி வந்து வன்னிப்பிராந்திய தமிழ்ராய்ச்சிமகாநாட்டு ஆய்வுத்தொகுதியையும். வேறும் நான்கு இந்திய வரலாற்று நூல்களையும் முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரியில் சேர்க்கும் வண்ணம் திரு. சண்முகலிங்கம் பணித்துள்ளார் என்று கூறி தந்துசென்றதே நான் அவரை முதன் முதலில் சந்தித்துக் கொண்ட வேளையாகும். அவரதுதமிழ்ப் பணியையும் நாட்டுப்பற்றையும் நான் மனதாரப் பாராட்டினேன். தெரிந்துகொண்டேன். எதிர்பாராதவிதமாக இங்குவந்தவேளை அவர் என்னோட தொடர்பு கொண்டார். அவரை எனதுவீட்டிற்கு அழைத்து உரயாடி அவர் கேட்ட சிலரது தொலை பேசி இலக்கங்களையும் கொடுத்தேன். . வன்னியின் பலதுறை ஆய்வுகளை மறைந்துபோகாது நூலுருவாக்க குமரேசன் அவற்றைத் தேடிப்பெற்றுள்ளார் என்றால் அது சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்கள் எவ்விதம் ஏட்டுச்சுவடிகளளாப் பெற்று நூலாக்கினாரோ அதே பாணியில் யார் யாரிடமோ இருந்த கட்டுரைகளைப் பெற்று அவற்றை அச்சுப்பதிவேற்றியுள்ளார் என்றால் அது சாராதரணமான பணியாக இருக்கமுடியாது. இந்த தொகுப்பில் கட்டுரைகளை எழுதியவர்களுக்கு இலகுவாகவே இந்த நூலைத்த டித்தேடிதந்தார் என்றால் அவரின் பரோபகாரத் தன்மையைப் பாராட்டாபமல் விடமுடியுமா? என்று குறிப்பிட்டு அவரைப்பாராட்டி ஒரு வாழ்த்துக்கவிதையும் வாசித்துக்கையளித்தார்.
வன்னிச் சங்கத்தைச் சேர்ந்த அதன் பொருளாளர் சபா இராஜேஸ்வரன் உரையாற்றும்போது திரு.சிவபாலு அவர்கள் கனடாவிற்கு வந்துள்ள விருபா குமரேசன் அவர்களைப் பாராட்டவேண்டும் என எங்களுக்கு ஆலோசனை வழங்கினார். நிருவாகசபைக் கூட்டத்தில் வைக்கப்பட்ட இந்தத் தீர்மானத்தை அனைவருமே ஏகோபித்து வன்னி மண்ணைச்சாராத ஒருவர் வன்னி தொடர்பான இந்தப் பெரும்பணியைச் செய்துள்ளார். அவரப் பாராட்ட வேண்டும் எனத் தீர்மானித்தார்கள். அவருக்கு வன்னிமக்கள் கடப்பாடுடையவர்கள் எனவும். 40 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த இந்த மகாநாட்டை நான் அறிவேன். அதனை இன்று வரலாற்றுப் பதிவாக ஆக்கித்தந்தமை வன்னி மண்ணின் வரலாற்றுபதிவாக கிடைத்துள்ளது. வன்னியைச் சார்ந்த யாரும் செய்யாத பணியைச் செய்துள்ள இந்தப்பணிக்காக அவரப் பாராட்டுவது போதாது. பெருந்தொகையாக மக்கள் வந்திருக்கவேண்டும் ஆனால் கோடடைகால பல்வேறு நிகழ்வுகளும் வெவ்வேறுநாடுகளுக்கு சென்று உள்ளநிலையில் மிகக் குறைந்தளவிலேயே வந்துள்ளனர் என்பதுதான் காரணமாகும். என்று உரைத்து அவரது பணி மேலும் தொடர பாராட்டினார்.
தொடர்ந்து ஏற்புரை நல்கினார் விருபா.து.குமரேசன். அவர் உரையாற்றும்போது ” தமிழர் வரலாறுகள் பதியப்படவேண்டும் என்ன நடந்தது என்பது பதியப்படாத நிலைமையே தமிழர் மத்தியில காணப்படும் நிலைமையாகும். பேராசிரியர் சிவசாமி அவர்களிடம் இருந்த கட்டுகள் அடங்கிய கோப்பை வாங்கி அதனைப் பதிப்பிப்பதற்கு நான்சிறு முயற்சிமட்டுமே எடுத்துள்ளேன். எனது நேரத்தை மட்டுந்தான் நான் செலுவுசெய்துள்ளேன். வேறு எதனையும் நான் சாதித்துவிடவில்லை என்ற அவர் தொடர்ந்து தமிழாராய்ச்சி மன்றத்துக் கோவைகளில தனிநாயம் அடிகளாரின் பல கடிதங்களைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக்கிடைத்தது. அவர் மேற்கொண்ட பணிகள் சாதாரணமானவையல்ல. அவருக்கு இருந்த வாய்ப்புக்களைப் பயன்படுத்தி வெளிநாடகளில் உள்ள பல தகவல்களை பெற்று தமிழ் தொடர்பான ஆவணங்களைப் பெற்றதோடு தமிழ்பற்றிய உண்மை நிலையை உலகிற்கு எடுத்துச் செல்லவேண்டும் என்பதனை முன்வைத்துத் தமிழாராய்ச்சி மகாநாட்டை நடத்தவேண்டும் என பலவேறு அறிஞர்களுடன் தொடர்பு கொண்டு கோலாலம்பூரில் 1964ல் தனிநாயம் அடிகளார் 1வது தமிழாரய்ச்சி மகாநாட்டை நடத்திக்காட்டினார். 1952ல் கால்கோளிடப்பட்ட ஆரம்ப்புள்ளி கோலாலாம் பூரில் தொடங்கி வைக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து இந்தியாவில் நடைபெற்ற தமிழாராய்ச்சிமாகநாட்டில் இலங்கையர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட செய்தியே எனக்கு தமிழ்பற்றிய தேடலையும் ஆதங்கத்தையும் ஏற்படுத்தியது என்பதாலேயே அவைபற்றி அறியவிளைந்தேன். அதுதான் எனக்கு தமிழ் மொழி பற்றிய நாட்டத்தைஏற்படுத்தியது. இதுவரை வெளிவந்த கட்டுரைகளை எங்கே பெற்றுக் கொள்ளலாம் என்னும் தகவல்களைத் தரும் ஒரு தொகுப்பைத் தயாரிக்கவும் அதுவே காரணமாக அமைந்தது என்றார். . இங்கிலாந்தில் உள்ள வன்னிச் சங்கம் 100 நூல்களப் பெற்றுக்கொண்டுள்ளது. அச்சகச் செலவோடு அனுப்புவத்றகான செலவை மட்டும் தீர்மானித்து அனுப்பிவைத்துள்ளேன் என்ற அவர் கனடாவிற்கும் அனுப்பிவைக்கமுடியும் என்றும் குறிப்பிட்டுத் தனது உரயை நிறைவுசெய்தார். அதனைத் தொடர்ந்தஅவரிடமிருந்து வன்னிச்சங்கம் 50 நூல்களைப் பெறுவதற்கான ஒழுங்கை மேற்கொண்டனர்.