சிம்புதேவன் இயக்கத்தில் யோகிபாபு நடித்துள்ள போட் திரைப்படத்தின் இரண்டாவது பாடலை இசையமைப்பாளர் தேவா பாடியுள்ளார். போட் படத்தில் யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் எம்.எஸ் பாஸ்கர், கௌரி கிஷன், சின்னி ஜெயந்த் மதுமிதா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தை மாலி மற்றும் மான்வி மூவி மேக்கர்ஸ் மற்றும் சிம்புதேவன் எண்டர்டெயின்மண்ட் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடல் இன்று மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் பாடலை இசையமைப்பாளர் தேவா பாடியுள்ளார்.
![போட் படத்தில் ஜிப்ரான் இசையில் பாடிய தேவா](https://uthayannews.ca/wp-content/uploads/2024/07/Boat-padam-Deva-padal.jpg)