வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ்க்கு கூடுதல் பொறுப்பாக முதல்வரின் முகவரி துறை சிறப்பு அதிகாரி பொறுப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்வரின் முகவரி திட்ட சிறப்பு அதிகாரியாக அமுதா ஐஏஎஸ்.க்கு கூடுதல் பொறுப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. உள்துறை செயலாளராக இருந்த அமுதா சில நாட்களுக்கு முன் வருவாய் துறை செயலாளராக மாற்றப்பட்டார். இந்த நிலையில் தற்போது கூடுதலாக முதல்வரின் முகவரி திட்ட சிறப்பு அதிகாரியாக அமுதா ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
