தொழில்நுட்ப கோளாறு நீங்கி விமான நிலையங்கள் வழக்கம் போல் செயல்படத் தொடங்கியுள்ளதாக விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
பிரபல மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ஏற்பட்ட மாறுதல்களால் மைக்ரோசாப்ட் இயங்குதளம் முடங்கியது. இந்த திடீர் சிக்கலால் பல நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் பாதிப்பை சந்தித்துள்ளன. இந்த சிக்கலால் இந்திய விமான நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. சென்னை, டில்லி, மும்பை உள்ளிட்ட விமான நிலையங்களில் வின்டோஸ் சாப்டவேர் குளறுபடியால் பயணிகளுக்கு போர்டிங் பாஸ்கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பயணிகள் பல நேரமாக விமான நிலையங்களில் காத்திருக்கும் நிலை உருவாகியது. இந்தியாவில் 170-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து என தகவல் வெளியாகியனது. சென்னை விமான நிலையத்தில் 16 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. 30க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. இதே போல் உலகம் முழுவதும் 3500க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறு நீங்கி விமான நிலையங்கள் வழக்கம் போல் செயல்படத் தொடங்கியுள்ளதாக விமான போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.