இசையமைப்பாளரான ஹிப்ஹாப் ஆதி, 2017-ல் வெளியான ‘மீசைய முறுக்கு’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அடுத்து 2021-ல் ‘சிவகுமாரின் சபதம்’ என்ற தனது இரண்டாவது படத்தை இயக்கினார். தற்போது அவர் மூன்றாவது படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு ‘கடைசி உலகப் போர்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும், படத்தில் நாயகனாக நடிப்பதுடன் இசையும் அமைத்துள்ளார். அத்துடன் படத்தை ஹிப்ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட் என்ற தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். இந்த சூழலில், இப்படத்தின் முதல் தோற்றம் மற்றும் காணொளி வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக விஎஃப்க்ஸ் காட்சிகள் சிறப்பாக வந்திருப்பதாக ரசிகர்கள் சமூல வலைதளங்களில் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். விஎஃப்க்ஸ் காட்சிகள் ஹாலிவுட் தரத்தில் இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பெரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.