சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் உள்ளார். இந்த வழக்கு தொடர்பாக, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, செந்தில் பாலாஜி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மதிய உணவு சாப்பிட்ட பிறகு, நெஞ்சு வலிப்பதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். இதைதொடர்ந்து, செந்தில் பாலாஜியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
